10 யூனுஸ்

Monday, September 5, 2011

பெயர்: வழக்கம் போல் இந்த அத்தியாயத்தின் பெயரும் - ஓர் அடையாளத்திற்காக 98 ஆம் வசனத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அதில் யூனுஸ் (அலை) அவர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த அத்தியாயத்தின் உள்ளடக்கம் யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறு பற்றியதல்ல!

இறக்கி அருளப்பட்ட இடம்:-
இந்த அத்தியாயம் முழுவதும் மக்காவில் இறங்கியுள்ளது என ஹதீஸ் அறிவிப்புகளிலிருந்து தெரியவருவதுடன் அத்தியாயத்தின் உள்ளடக்கமும் இதனை உறுதிப்படுத்துகின்றது.

இறக்கி அருளப்பட்ட காலம்:- இந்த அத்தியாயம் இறங்கிய காலம் குறித்தது நமக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. ஆனால், இதன் கருத்தைக் கவணித்தால், மக்கா வாழ்க்iகியின் இறுதிக் கட்டத்தில் இஸ்லாமிய அழைப்பை எதிப்போரின் கொடுமைகள் தீவிரமாகி விட்டிருந்த போது இது இறங்கியிருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த அத்தியாயத்தில் ஹிஜ்ரத் குறித்து எவ்விதக் குறிப்பும காணப்படவில்லை. எனவே, ஹிஜ்ரத்தைக் குறித்து வெளிப்படையாகவோ, மறைமுகமாவோ ஏதாவது ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ள அத்தியாயங்கள் இறங்கிய காலத்திற்கு முன்பு இந்த அத்தியாயம் அருளப்பட்டிருக்கலாம் என்றே கருத வேண்டும். இவ்வாறு காலத்தை நிர்ணயித்துக் கொண்ட பின்னர் இதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கிட வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் இந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றுப் பின்னணி ஆறாம் அத்தியாயமான அல் அன்ஆம் மற்றும் ஏழாம் அத்தியாயமான அல் அஃராஃப் ஆகியவற்றின் முன்னுரைகளில் விவரிக்கப்பட்டுவிட்டது.

மையக் கருத்து:-
இஸ்லாத்தின்பால் அழைத்தல், அறிவுரை வழங்குதல், எச்சரிக்கை செய்தல் ஆகியவையே இந்த அத்தியயத்தில் கூறப்படுகின்றன. வசனத்தின் கருத்து இவ்வாறு தொடங்குகிறது: 'ஒரு மனிதர் தூதுத்துவச் செய்தியை சமர்ப்பிப்பதைக் கண்டு மக்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், அந்த மனிதர் சூனியக்காரர் என்று அநியாயமாய்க் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையாதெனில் அவர் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் செய்திகளில் ஒன்றுகூட வியப்பபுக்குரியதோ, சூனியம் மற்றும் ஜோதிடத்தோடு சம்மந்தப்பட்டதோ அல்ல. அவர் இரு முக்கிய பேருண்மைகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஒன்று: ஓரிறைக் கொள்கை. இரண்டு: கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் வருகை. உங்கள் முன் அவர் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் இந்த இரண்டு உண்மைகளும் நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் யதார்த்த உண்மைகளாகும். அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் இறுதி முடிவு நல்லதாய் இருக்கும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்களே அதன் தீய விளைவைக் காணப்போகிறிர்கள்.'

விவாதப் பொருள்கள்: இந்த அறிமுக விளக்கத்திற்குப் பிறகு ஒரு பிரத்யோக வரிசைக்கிரமத்தோடு பின்வரும் விவாதப் பொருள்கள் எடுத்துரைக்கப்படுகின்றன:


1. பேரணடத்தைப் படைத்துப் பரிபலித்து வரும் இறைவன் ஒருவனே என்பதிலும், மறுமை வாழ்வு தொடர்பான விஷயங்களிலும் அறியாமை மிக்க பிடிவாதத்தில் மூழ்காதவர்களின் அறிவுக்கும் மனசாட்சிக்கும் திருப்தி அளிக்கின்ற ஆதாரங்களை வழங்குதல்.

2. மக்கள் ஓரிறைக் கொள்கையையும், மறுமைக் கோடபாட்டையும் ஏற்றுக் கொள்ளத் தடையாக இருந்து கொண்டிருந்த (எப்போதும் தடையாகவே இருந்து கொண்டிருக்கின்ற) தப்பான அபிப்பிராயங்களை அகற்றுதல். மேலும், அது விஷயத்தில் காட்டப்படும் அலட்சியப் போக்குகளைக் குறித்து எச்சரித்தல்.

3. முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுவம் குறித்தும் அவர்கள் கொண்டு வந்திருக்கும் தூதுச் செய்தி குறித்தும் எழுப்பப்பட்டு வந்த ஐயங்களுக்கும் ஆடசேபணைகளுக்கும் பதிலளித்தல்.

4. மறுவுலக வாழ்வில் நடக்க விருப்பவற்றை முன் கூட்டியே அறிவித்தல்.

5. இந்த உலகின் தற்போதைய வாழ்வு, உண்மையில் சோதனைக்குரிய வாழ்வாகும். இந்த வாழ்வின் அவகாசத்ததை நீங்கள் வீணாக்கி விட்டால், மேலும் இறைத்தூதரின் வழிகாட்டலை ஏற்று இந்தச் சோதனையில் வெற்றி பெற முயற்சி செய்யவில்லையென்றால் பின்னர் வேறொரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்பைதைத் தெளிவாக எச்சரித்தல்.

6. மக்கள் இறைவழிகாட்டல் இன்றி வாழ்ந்து கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் வாழ்வில் காணப்பட்ட பகிரங்கமான அறியாமைகளையும் வழிகேடுகளையும் சுட்டிக் காட்டுதல்.
இவை தொடர்பாக நூஹ் (அலை) அவர்களின் வரலாறு சுருக்கமாகவும் மூஸா (அலை) அவர்களின் வரலாறு சற்ற விரிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்த வரலாறுகள் வாயிலாக நான்கு விஷங்களை மனத்தில் பதிய வைப்பது நோக்கமாகும்.


    (அ) 'முஹம்மத் (ஸல்) அவர்களுடன் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் நூஹ் (அலை) மற்றும் மூஸா (அலை) ஆகியோருடன் உங்களுக்கு முன்சென்ற சமுதாயத்தவர்கள் நடந்து கொண்ட முறையை ஒத்ததாய் உள்ளது . எனவே, தம்முடைய இந்தப் போக்கின் விளைவாக அந்தச் சமுதாயத்தார்கள் எந்த கதியை அடைந்து விட்டிருக்கின்றார்களோ அதே கதியைத் தான் நீங்களும் அடைய நேரிடும் என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்' என எச்சரித்தல்.

    (ஆ) 'முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இன்று பலவீனர்களாய் இருப்பதைக் கண்டு எப்போதும் இதே நிலைதான் நீடிக்கும் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். மூஸா, மற்றும் ஹாரூன் (அலை) ஆகியோருக்குப் பக்கபலமாக இருந்த அதே இறைவன் தான் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றான் என்பதும், எவருடைய சிந்தனைக்கும் எட்ட முடியாத வகையில் சூழ்நிலைகளின் போக்கை அவன் மாற்றி விடுகின்றான்' என்பதையும் அந்த மக்களுக்கு உணர்த்தல்.

    (இ) நீங்கள் திருந்துவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்ட பின்னர் இறுதி நிமிடத்தில் நீங்கள் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிக்கப்பட மாட்டீர்கள் என்னும் உண்மையை எடுத்துரைத்தல்.

    (ஈ) இறைநம்பிக்கையாளர்கள், எதிர்ப்புச் சூழ்நிலைகள் மிகவும் கடுமையாகி விட்டிருப்பதைக் கண்டு நிராசை அடைந்துவிட வேண்டாம். மேலும், இத்தகைய நிலைகளில் தாம் பணியாற்றுவது எப்படி என்றும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும், இதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கடுமையான நிலையிலிருந்து அவர்களை இறைவன் தன் கருணையினால் காப்பாற்றி விடும்போது, இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எகிப்தின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுபட்ட பின்னர் மேற்கொண்ட பாதையில் தாமும் செல்லக்கூடாது என அவர்களை எச்சரித்தல்.

0 comments:

Post a Comment