9 அத் தவ்பா

Monday, September 5, 2011

 பெயர்: இந்த அத்தியாயம் இரு பெயர்களில் பிரபலமாகியுள்ளது. ஒன்று 'அத் தவ்பா' மற்றொன்று 'அல் பராஅத்'. இதில் ஓரிடத்தில் நம்பிக்கையாளர்கள் சிலரின் பிழைகள் மன்னிக்கப்பட்டதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அத் தவ்பா - 'பிழைப்பொறுத்தல்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் ஆரம்பத்தில் இணைவைப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விஷயத்தில் இனி எவ்விதப் பொறுப்பும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பராஅத் - 'பொறுப்பு நீங்குதல்' - என்று பெயர்பெற்றுள்ளது.

'பிஸ்மில்லாஹ்' எழுதாததற்குரிய காரணம்:-
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' எழுதப்படவில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களே அதனை எழுதச் சொல்லவில்லை!

அருளப்பட்ட காலமும் அத்தியாயத்தின் கூறுகளும்:-
இந்த அத்தியாயம் மூன்று உரைத்தொடர்களைக் கொண்டதாகும். முதல் உரைத்தொடர், அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து 28-ஆவது வசனம் வரை செல்கிறது. இது ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் அல்லது அதனையொட்டிய காலத்தில் இறக்கியருளப்பட்;டதாகும். நபி (ஸல்) அவர்கள் இந்த ஆண்டில் அபூபக்கர் (ரலி) அவர்களை ஹஜ் பயணக்குழுவின் தலைவராக நியமித்து மக்காவிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் புறப்பட்ட பிறகு இந்த உரைத்தொடர் இறங்கிற்று. ஹஜ்ஜின் போது அரபுலகம் முழுவதிலிருந்தும் ஒன்று கூடும் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த உரைத்தொடரை அறிவித்து விட வேண்டும் என்பதற்காகவும் மேலும், இதற்கேற்ப எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதோ அந்த முடிவையும் எடுத்துரைத்து விட வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் உடனே அலி (ரலி) அவர்களை அபூபக்ருக்குப் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.

இரண்டாம் உரைத்தொடர், 29-ஆவது வசனத்திலிருந்து 72-ஆவது வசனம் வரை செல்கிறது. இந்த உரைத்தொடர் ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு ரஜப் மாதம் அல்லது அதற்கு சற்று முந்தைய காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது - இறங்கிற்று. இந்த உரைத்தொடரில் ஜிஹாத் (அறப்போர்) புரியும்படி இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. மேலும், நயவஞ்சகர்கள் மற்றும் பலவீனமான நம்பிக்கையாளர்கள் ஆகியோர் குறித்து பழித்துரைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உரைத்தொடர், 73ஆவது வசனத்திலிருந்து தொடங்கி இற்த அத்தியாயத்தின் இறுதி வரை செல்கிறது. தபூக்கிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இது இறங்கியது. இதில் நயவஞசர்களின் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலமு;, தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டவர்கள கடுமையான முறையில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களில் சிலர் உண்மையான இறைநம்பிக்iயாளர்களாய் இருந்தும் கூட இறைவழியில் நடந்த போரில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்து விட்டார்கள். அத்தகையவர்களைக் கண்டிப்பதுடன் அவர்களை மன்னித்து விட்டதாகவும் இறைவன் இதில் அறிவித்துள்ளான்.

வலாற்றுப் பின்னணி:-
இந்த அத்தியாயத்தின் கருத்துகள் எந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனவோ, அந்த நிகழ்ச்சிகள் ஹுதைபிய்யா உடன்படிக்கையிலிருந்து ஆரம்பமாகின்றன. ஹுதைபிய்யா உடன்படிக்கை செய்யப்படும் உரை ஏறத்தாழ அரபுலகத்தின் மூன்றிலொரு பகுதியில், இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான சமுதாயத்தின் வாழ்க்கை நெறியாகவும் முழுமையான சுயாதிகாரம்கொண்ட ஓர் அரசாகவும் மலர்ந்து விட்டிருந்தது. ஹுதைபிய்யா உடன்படிக்கை செய்யப்பட்டபோது, முன்பைவிட அதிக அமைதியும் நிம்மதியும் கொண்ட சூழ்நிலையில் நான்கு திசைகளிலும் தன் செல்வாக்கைப் பரப்புவதற்குரிய சந்தர்ப்பமும் அந்த தீன்-நெறிக்குக் கிடைத்தது. இதன்பிறகு நிகழ்ச்சிகள் மிக வேகமாக நடைபெற்றன. அவை இரண்டும் திசைகளில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தின. அவற்றில் ஒன்று அரபுலகத்துடனும், மற்றொன்று ரோம் சாம்ராஜ்யத்துடனனும் தொடர்பு கொண்டிருந்தன.

அரபுலகத்தை வசப்படுத்தல்;:-
அரபுலகத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர் இஸ்லாமிய அழைப்பு, பிரசாரம் மறறம் இஸ்லாத்தின் வலிமையை உறுதிப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றுக்காகப் பல செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இஸ்லாத்தின் செல்வாக்கு பெரும் அளவுக்கு விரிவடைந்து விட்டது. குறைஷிகளிடையே இருந்த தீவிரவாத சக்திகளால் இதனைப பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே, அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்து விட்டார்கள். இந்த உடனபடிக்கை கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு இஸ்லாத்தின் மீது ஓர் இறுதியான, தீர்க்மான தாக்குதலை நடத்திட வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள், குறைஷிகள் இப்படி ஒப்பந்தத்தை முறிததுவிட்ட பின்பு அவர்களுக்குத் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கான எந்த வாய்ப்பையும் அளித்திடவில்லை. மேலும், திடீரென மக்காவின் மீது தாக்குதல் நடத்தி ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் அதனை வெற்றி கொண்டுவிட்டார்கள். இதற்குப் பின் பழைய அறியாமைக்கால அமைப்பு, தன் ஜீவமரணப் போராட்டத்தை ஹுனைன் களத்ததில் நடத்தியது. ஆனால், இந்தப் போராட்டமும் தோல்வியடைந்தது. மேலும், ஹுனைன் போரில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி, அரபுலகம் இப்போத இஸ்லாமிய நாடாகத்தான் விளங்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு இட்டுச் செனறது. இந்த நிகழ்ச்சி நடந்து ஓர் ஆண்டு கூட முழுமையடையவில்லை. அதற்குள் அரபுலகத்தின் பெரும்பாலான பகுதிகள் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் வந்துவிட்டன.

தபூக் போர்:-
மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்பே ரோமப் பேரரசுடன் போராட்டம் தொடங்கி விட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர் இஸ்லாத்தின் தூதை எடுத்தோத அரவு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் குழுக்களை அனுப்பி தை;தார்கள். அவற்றில் ஒன்று, வடதிசையில் சிரியாவின் எல்லையை ஒட்டியுள்ள (கிறிஸ்துவக்) குலங்களிடமும், இன்னொரு தூதுக்குழு புஸ்ரா நகரத்தின் கிறிஸ்துவத் தலைவரிடமும் சென்றிருந்தது. (ஆனால், இந்தத் தூதுக் குழுக்களின் பெரும்பாலான நபர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.) எனவே வருங்காலத்தில் சிரியாவின் எல்லைப் பகுதிகள் முஸ்லிம்களுக்கு அச்சமற்ற பாதுகாப்புன பிரதேசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு ஜமாதில் ஊலா மாதத்தில் மூவாயிரம் போர் வீரர்கள் கொண்ட ஒரு படையை சிரியா தேச எல்லையை நோக்கி அனுப்பினார்கள். இந்தச் சிறிய படை 'முஃத்தா' என்னுமிடத்தில் மன்னன் ஷுர்ஹபீலின் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட படையுடன் மோதியது. ஒருவருக்கு முப்பத்து மூன்று போர் எனும் விகிதாச்சாரத்தில் நடைபெற்ற இந்தப் போரிலும் இறைநிராகரிப்பாளர்களால் முஸ்லிம்களை வென்றிட முடியவில்லை. இந்த நிகழ்ச்சி தான் சிரியா தேசத்தையும் அதனையொட்டி வசித்துக் கொண்டிருந்த - அரைகுறை சுதந்தரம் பெற்ற அரபுக் குலங்களையும் - ஏன் இராக்கின் அருகில் வசித்துக் கொண்டிருந்த, மன்னன் கிஸ்ராவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நஜ்தீ குலங்களையும் கூட இஸ்லாத்தின் பால் ஈர்க்கச் செய்தது. இந்தக் குலத்தினர் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களாயினர். இதற்கு அடுத்த ஆண்டிலேயே கைஸர் மன்னர் (ஊநுயுளுநுசு) முஃத்தா போரில் தம்மைத் தேர்வியுறச் செய்த முஸ்லிம்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக சிரியா தேச எல்லையில் ராணுவ முஸ்தீபுகள் செய்யத் தொடங்கி விட்டார். நபி (ஸல்) அவர்கள் (இதைப் பற்றிய தகவல் கிட்டியதும்) ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் முப்பதாயிரம் போர்வீரர்களுடன் சிரியா நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள். தபூக் சென்றடைந்தவுடன், கைஸர் மன்னர் போர் செய்வதற்குப் பதிலாக எல்லையிலிருந்து தன் படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டார் எனத் தெரிய வந்தது. கைஸர் இப்படிப் பினவாங்கிக் கொண்டதனால் தமக்குப் கிடைத்த தார்மீக வெற்றியே இந்தக் கட்டத்தில் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். மேலும், தபூக்கிலிருந்து முன்னேறி சிரியா நாட்டு எல்லைக்குள் நுழைவதற்குப் பதிலாக இந்த வெற்றியின் வாயிலாக முடிந்தவரை அதிக அளவில் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கே முதலிடம் கொடுத்தார்கள். ஆகவே, நபியவர்கள் தபூக்கில் 20 நாட்கள் தங்கி ரோமப் பேரரசுக்கும் இஸ்லாமிய நாட்டுக்கும் இடையில் அமைந்திருந்த - இதுவரை ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து வந்த பல சின்னஞ்சிறு அரசுகளைத் தம் ராணுவ வலிமையைப் பிரயோகித்து இஸ்லாமிய அரசுக்குப் கப்பம் கட்டுபவையாகவும், அதன் கட்டளைக்குப் கட்டுப்பட்டு நடப்பவையாகவும் ஆக்கிக் கொண்டார்கள். இதனால் ஏற்பட்ட மிகப்nரும் பயன் யாதெனில், ரோமப் ரேரசுடன் ஒரு நீண்ட போராட்டத்தில் இறங்கும் முன்னர் அரபுலகத்தின் மீது தன் பிடியை வலுப்படுத்திக் கொள்ள முழுமையான சந்தர்ப்பம் இஸ்லாத்திற்குக் கிடைத்தது.

பிரச்சனைகளும் பொருளடக்கமும்:
1.  இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்ட பின்னர் அந்த நேரத்தில் எதிர்கொள்ள வேணடியிருந்த - இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்ற பெரும்பெரும் பிரச்சனைகளை நாம் எளிதில் வரையறுத்துக் கொள்ள முடியும்.
இப்பொழுது அரபுலகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு முற்றிலுமாக இறை நம்பிக்iயாளர்கள் வசம் வந்துவிட்டதால் அரபுலகத்தை முழுமையான ஓர் இஸ்லாமிய அரசாக மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் ஒன்றைத் தெளிவான முறையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாயிற்று. எனவே, பின்வரும் வகைகளில் அந்தச் செயல்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.


    அ.இஸ்லாத்தின் மையக் கேந்திரம் நிரந்தரமான, முழுமையான இஸ்லாமியக் கேந்திரமாய் மாறுவதற்காக இறைவனுக்கு இணைவைப்பது (ஷிர்க்) அரபுலகத்திலிருந்து அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகத் தான் இணைவைப்பாளர்களுடன் இனி எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும் அவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது இத்துடன் முடிவடைந்துவிட்டது என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.

    ஆ. இனி வருங்காலத்தில் இறையில்லமான கஅபாவை பராமரிக்கும் பொறுப்பு ஏகத்துவவாதிகள் வசமே இருக்கச் செய்தல். மேலும், இறையில்லத்தின் எல்லைகளுக்குள் இணைவைத்தல் மற்றும் அறியாமைக்கால அனைத்துச் சம்பிரதாயங்களையும் வலிமை கொண்டு தடுத்து நிறுத்தல. அத்துடன் இனி இணைவைப்போர் அந்த இல்லத்தின் எல்லைக்கு அருகில் கூட வரக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது.

    இ. ஆரபிகளின் சமூக வாழ்வில் இதுவரை எஞ்சியிருந்த அறியாமைக் காலச் சடங்குகளின் தாக்கங்களை அடியோடு களைவதில் கவனம் செலுத்தப்பட்டது. அந்தச் சடங்குகளில் சங்கைக்குரிய மாதங்களைத் தம் விருப்பப்படி மாற்றுவதாற்காக அவர்கள் ஏறபடுத்திக் கொண்ட நஸஃ எனும் மிகவும் கீழ்த்தரமான மரபு குறித்து நேரடியாக் கண்டிக்கப்பட்டுள்ளது.


2.  அரபுலகத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி முழுமை அடைந்த பிறகு அரபுலகத்திற்கு வெளியே சத்திய மார்க்கத்தின் செல்வாக்கை விரிவபடுத்தும் பணியின்பால் கவனம் செலுத்தப்பட்டது. இந்த முக்கியமான கட்டத்தில் முஸ்லிம்களுக்குத் தேவையான ஏவுரைகள் அருளப்பட்டன. அரபுலகத்திற்;;கு வெளியே வாழும் மக்களுக்கு - குறிப்பாக அரசுகளுக்கு சத்திய அழைப்பு தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் மறுத்துவிடலாம். அதற்கு அவர்களுக்கு முழு சுதந்தரம் உண்டு. ஆனால், தம் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டும் அக்கரமங்கள் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. ஆகவே, அவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்குக் கட்டுபட்டு வாழ சம்மதிக்க வேண்டும். அவ்வாறு சம்மதிக்கவில்லையெனறால் வாள் பலத்தைக் கொண்டு அவர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விடும்படி முஸ்லிமகளுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.


3.  மூன்றாவது முக்கிய விவகாரம் நயவஞ்சகர்கள் பற்றியதாகும். இதுவரை தற்காலித நலன்களைக் கருதி, கண்டும காணாது போல் அவர்களின் தவறுகளைப் பொறுத்துச் செல்லும்போது மேற்கொள்ளப்பட்டு வந்தது. இனி அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று இப்போது கட்டளையிடப்பட்டது. மேலும், பகிரங்கமாய் சத்தியத்தை நிராகரிப்பவர்களுடன் எந்தக் கடுமையான போக்கு மேற்கொள்ளப்படுகின்றதோ அந்தக் கடுமையான போக்கினையே இந்த மறைமுக நிராகரிப்பாளர்களிடமும் மேற்கொளள் வேண்டும் என்று இப்போது உத்தரவிடப்பட்டது.


4.  வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் சிலரிடம் இன்னும் ஒருசில பலவீனங்கள் எஞ்சியிருந்தன. அவற்றைக் களைய வேண்டியதும் அவசியமாயிற்று. எனவே, தபூக் போரின் போது சோம்பலும் பலவீனமு;ம காட்டியவர்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டனர். மேலும், இனி வருங்காலத்தில் இப்படி நேராமல் இருப்பதற்காக இறைவாக்கை மேலோங்கச் செய்வதற்காக மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சியும், இறைமறுப்புக்கும், இஸ்லாத்திற்கும் இடையிலான போராட்டமுமே ஒரு நம்பிக்கையாளனின் நம்பிக்கைப் பிரமாணத்தை உரைத்துப் பார்க்கும் உண்மையான உரைகல் என்ற மிகத் தெளிவாய் விளக்கிக் காட்டப்பட்டது.

0 comments:

Post a Comment