10 யூனுஸ்

Monday, September 5, 2011

பெயர்: வழக்கம் போல் இந்த அத்தியாயத்தின் பெயரும் - ஓர் அடையாளத்திற்காக 98 ஆம் வசனத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அதில் யூனுஸ் (அலை) அவர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த அத்தியாயத்தின் உள்ளடக்கம் யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறு பற்றியதல்ல!

இறக்கி அருளப்பட்ட இடம்:-
இந்த அத்தியாயம் முழுவதும் மக்காவில் இறங்கியுள்ளது என ஹதீஸ் அறிவிப்புகளிலிருந்து தெரியவருவதுடன் அத்தியாயத்தின் உள்ளடக்கமும் இதனை உறுதிப்படுத்துகின்றது.

இறக்கி அருளப்பட்ட காலம்:- இந்த அத்தியாயம் இறங்கிய காலம் குறித்தது நமக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. ஆனால், இதன் கருத்தைக் கவணித்தால், மக்கா வாழ்க்iகியின் இறுதிக் கட்டத்தில் இஸ்லாமிய அழைப்பை எதிப்போரின் கொடுமைகள் தீவிரமாகி விட்டிருந்த போது இது இறங்கியிருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த அத்தியாயத்தில் ஹிஜ்ரத் குறித்து எவ்விதக் குறிப்பும காணப்படவில்லை. எனவே, ஹிஜ்ரத்தைக் குறித்து வெளிப்படையாகவோ, மறைமுகமாவோ ஏதாவது ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ள அத்தியாயங்கள் இறங்கிய காலத்திற்கு முன்பு இந்த அத்தியாயம் அருளப்பட்டிருக்கலாம் என்றே கருத வேண்டும். இவ்வாறு காலத்தை நிர்ணயித்துக் கொண்ட பின்னர் இதன் வரலாற்றுப் பின்னணியை விளக்கிட வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் இந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றுப் பின்னணி ஆறாம் அத்தியாயமான அல் அன்ஆம் மற்றும் ஏழாம் அத்தியாயமான அல் அஃராஃப் ஆகியவற்றின் முன்னுரைகளில் விவரிக்கப்பட்டுவிட்டது.

மையக் கருத்து:-
இஸ்லாத்தின்பால் அழைத்தல், அறிவுரை வழங்குதல், எச்சரிக்கை செய்தல் ஆகியவையே இந்த அத்தியயத்தில் கூறப்படுகின்றன. வசனத்தின் கருத்து இவ்வாறு தொடங்குகிறது: 'ஒரு மனிதர் தூதுத்துவச் செய்தியை சமர்ப்பிப்பதைக் கண்டு மக்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், அந்த மனிதர் சூனியக்காரர் என்று அநியாயமாய்க் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையாதெனில் அவர் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் செய்திகளில் ஒன்றுகூட வியப்பபுக்குரியதோ, சூனியம் மற்றும் ஜோதிடத்தோடு சம்மந்தப்பட்டதோ அல்ல. அவர் இரு முக்கிய பேருண்மைகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஒன்று: ஓரிறைக் கொள்கை. இரண்டு: கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் வருகை. உங்கள் முன் அவர் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் இந்த இரண்டு உண்மைகளும் நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் யதார்த்த உண்மைகளாகும். அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் இறுதி முடிவு நல்லதாய் இருக்கும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்களே அதன் தீய விளைவைக் காணப்போகிறிர்கள்.'

விவாதப் பொருள்கள்: இந்த அறிமுக விளக்கத்திற்குப் பிறகு ஒரு பிரத்யோக வரிசைக்கிரமத்தோடு பின்வரும் விவாதப் பொருள்கள் எடுத்துரைக்கப்படுகின்றன:


1. பேரணடத்தைப் படைத்துப் பரிபலித்து வரும் இறைவன் ஒருவனே என்பதிலும், மறுமை வாழ்வு தொடர்பான விஷயங்களிலும் அறியாமை மிக்க பிடிவாதத்தில் மூழ்காதவர்களின் அறிவுக்கும் மனசாட்சிக்கும் திருப்தி அளிக்கின்ற ஆதாரங்களை வழங்குதல்.

2. மக்கள் ஓரிறைக் கொள்கையையும், மறுமைக் கோடபாட்டையும் ஏற்றுக் கொள்ளத் தடையாக இருந்து கொண்டிருந்த (எப்போதும் தடையாகவே இருந்து கொண்டிருக்கின்ற) தப்பான அபிப்பிராயங்களை அகற்றுதல். மேலும், அது விஷயத்தில் காட்டப்படும் அலட்சியப் போக்குகளைக் குறித்து எச்சரித்தல்.

3. முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுவம் குறித்தும் அவர்கள் கொண்டு வந்திருக்கும் தூதுச் செய்தி குறித்தும் எழுப்பப்பட்டு வந்த ஐயங்களுக்கும் ஆடசேபணைகளுக்கும் பதிலளித்தல்.

4. மறுவுலக வாழ்வில் நடக்க விருப்பவற்றை முன் கூட்டியே அறிவித்தல்.

5. இந்த உலகின் தற்போதைய வாழ்வு, உண்மையில் சோதனைக்குரிய வாழ்வாகும். இந்த வாழ்வின் அவகாசத்ததை நீங்கள் வீணாக்கி விட்டால், மேலும் இறைத்தூதரின் வழிகாட்டலை ஏற்று இந்தச் சோதனையில் வெற்றி பெற முயற்சி செய்யவில்லையென்றால் பின்னர் வேறொரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்பைதைத் தெளிவாக எச்சரித்தல்.

6. மக்கள் இறைவழிகாட்டல் இன்றி வாழ்ந்து கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் வாழ்வில் காணப்பட்ட பகிரங்கமான அறியாமைகளையும் வழிகேடுகளையும் சுட்டிக் காட்டுதல்.
இவை தொடர்பாக நூஹ் (அலை) அவர்களின் வரலாறு சுருக்கமாகவும் மூஸா (அலை) அவர்களின் வரலாறு சற்ற விரிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்த வரலாறுகள் வாயிலாக நான்கு விஷங்களை மனத்தில் பதிய வைப்பது நோக்கமாகும்.


    (அ) 'முஹம்மத் (ஸல்) அவர்களுடன் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் நூஹ் (அலை) மற்றும் மூஸா (அலை) ஆகியோருடன் உங்களுக்கு முன்சென்ற சமுதாயத்தவர்கள் நடந்து கொண்ட முறையை ஒத்ததாய் உள்ளது . எனவே, தம்முடைய இந்தப் போக்கின் விளைவாக அந்தச் சமுதாயத்தார்கள் எந்த கதியை அடைந்து விட்டிருக்கின்றார்களோ அதே கதியைத் தான் நீங்களும் அடைய நேரிடும் என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்' என எச்சரித்தல்.

    (ஆ) 'முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இன்று பலவீனர்களாய் இருப்பதைக் கண்டு எப்போதும் இதே நிலைதான் நீடிக்கும் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். மூஸா, மற்றும் ஹாரூன் (அலை) ஆகியோருக்குப் பக்கபலமாக இருந்த அதே இறைவன் தான் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றான் என்பதும், எவருடைய சிந்தனைக்கும் எட்ட முடியாத வகையில் சூழ்நிலைகளின் போக்கை அவன் மாற்றி விடுகின்றான்' என்பதையும் அந்த மக்களுக்கு உணர்த்தல்.

    (இ) நீங்கள் திருந்துவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்ட பின்னர் இறுதி நிமிடத்தில் நீங்கள் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிக்கப்பட மாட்டீர்கள் என்னும் உண்மையை எடுத்துரைத்தல்.

    (ஈ) இறைநம்பிக்கையாளர்கள், எதிர்ப்புச் சூழ்நிலைகள் மிகவும் கடுமையாகி விட்டிருப்பதைக் கண்டு நிராசை அடைந்துவிட வேண்டாம். மேலும், இத்தகைய நிலைகளில் தாம் பணியாற்றுவது எப்படி என்றும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும், இதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கடுமையான நிலையிலிருந்து அவர்களை இறைவன் தன் கருணையினால் காப்பாற்றி விடும்போது, இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எகிப்தின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுபட்ட பின்னர் மேற்கொண்ட பாதையில் தாமும் செல்லக்கூடாது என அவர்களை எச்சரித்தல்.

9 அத் தவ்பா

 பெயர்: இந்த அத்தியாயம் இரு பெயர்களில் பிரபலமாகியுள்ளது. ஒன்று 'அத் தவ்பா' மற்றொன்று 'அல் பராஅத்'. இதில் ஓரிடத்தில் நம்பிக்கையாளர்கள் சிலரின் பிழைகள் மன்னிக்கப்பட்டதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அத் தவ்பா - 'பிழைப்பொறுத்தல்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் ஆரம்பத்தில் இணைவைப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விஷயத்தில் இனி எவ்விதப் பொறுப்பும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பராஅத் - 'பொறுப்பு நீங்குதல்' - என்று பெயர்பெற்றுள்ளது.

'பிஸ்மில்லாஹ்' எழுதாததற்குரிய காரணம்:-
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' எழுதப்படவில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களே அதனை எழுதச் சொல்லவில்லை!

அருளப்பட்ட காலமும் அத்தியாயத்தின் கூறுகளும்:-
இந்த அத்தியாயம் மூன்று உரைத்தொடர்களைக் கொண்டதாகும். முதல் உரைத்தொடர், அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து 28-ஆவது வசனம் வரை செல்கிறது. இது ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் அல்லது அதனையொட்டிய காலத்தில் இறக்கியருளப்பட்;டதாகும். நபி (ஸல்) அவர்கள் இந்த ஆண்டில் அபூபக்கர் (ரலி) அவர்களை ஹஜ் பயணக்குழுவின் தலைவராக நியமித்து மக்காவிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் புறப்பட்ட பிறகு இந்த உரைத்தொடர் இறங்கிற்று. ஹஜ்ஜின் போது அரபுலகம் முழுவதிலிருந்தும் ஒன்று கூடும் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த உரைத்தொடரை அறிவித்து விட வேண்டும் என்பதற்காகவும் மேலும், இதற்கேற்ப எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதோ அந்த முடிவையும் எடுத்துரைத்து விட வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் உடனே அலி (ரலி) அவர்களை அபூபக்ருக்குப் பின்னால் அனுப்பி வைத்தார்கள்.

இரண்டாம் உரைத்தொடர், 29-ஆவது வசனத்திலிருந்து 72-ஆவது வசனம் வரை செல்கிறது. இந்த உரைத்தொடர் ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு ரஜப் மாதம் அல்லது அதற்கு சற்று முந்தைய காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது - இறங்கிற்று. இந்த உரைத்தொடரில் ஜிஹாத் (அறப்போர்) புரியும்படி இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. மேலும், நயவஞ்சகர்கள் மற்றும் பலவீனமான நம்பிக்கையாளர்கள் ஆகியோர் குறித்து பழித்துரைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உரைத்தொடர், 73ஆவது வசனத்திலிருந்து தொடங்கி இற்த அத்தியாயத்தின் இறுதி வரை செல்கிறது. தபூக்கிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இது இறங்கியது. இதில் நயவஞசர்களின் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலமு;, தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டவர்கள கடுமையான முறையில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களில் சிலர் உண்மையான இறைநம்பிக்iயாளர்களாய் இருந்தும் கூட இறைவழியில் நடந்த போரில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்து விட்டார்கள். அத்தகையவர்களைக் கண்டிப்பதுடன் அவர்களை மன்னித்து விட்டதாகவும் இறைவன் இதில் அறிவித்துள்ளான்.

வலாற்றுப் பின்னணி:-
இந்த அத்தியாயத்தின் கருத்துகள் எந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனவோ, அந்த நிகழ்ச்சிகள் ஹுதைபிய்யா உடன்படிக்கையிலிருந்து ஆரம்பமாகின்றன. ஹுதைபிய்யா உடன்படிக்கை செய்யப்படும் உரை ஏறத்தாழ அரபுலகத்தின் மூன்றிலொரு பகுதியில், இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான சமுதாயத்தின் வாழ்க்கை நெறியாகவும் முழுமையான சுயாதிகாரம்கொண்ட ஓர் அரசாகவும் மலர்ந்து விட்டிருந்தது. ஹுதைபிய்யா உடன்படிக்கை செய்யப்பட்டபோது, முன்பைவிட அதிக அமைதியும் நிம்மதியும் கொண்ட சூழ்நிலையில் நான்கு திசைகளிலும் தன் செல்வாக்கைப் பரப்புவதற்குரிய சந்தர்ப்பமும் அந்த தீன்-நெறிக்குக் கிடைத்தது. இதன்பிறகு நிகழ்ச்சிகள் மிக வேகமாக நடைபெற்றன. அவை இரண்டும் திசைகளில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தின. அவற்றில் ஒன்று அரபுலகத்துடனும், மற்றொன்று ரோம் சாம்ராஜ்யத்துடனனும் தொடர்பு கொண்டிருந்தன.

அரபுலகத்தை வசப்படுத்தல்;:-
அரபுலகத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர் இஸ்லாமிய அழைப்பு, பிரசாரம் மறறம் இஸ்லாத்தின் வலிமையை உறுதிப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றுக்காகப் பல செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இஸ்லாத்தின் செல்வாக்கு பெரும் அளவுக்கு விரிவடைந்து விட்டது. குறைஷிகளிடையே இருந்த தீவிரவாத சக்திகளால் இதனைப பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே, அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்து விட்டார்கள். இந்த உடனபடிக்கை கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு இஸ்லாத்தின் மீது ஓர் இறுதியான, தீர்க்மான தாக்குதலை நடத்திட வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள், குறைஷிகள் இப்படி ஒப்பந்தத்தை முறிததுவிட்ட பின்பு அவர்களுக்குத் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கான எந்த வாய்ப்பையும் அளித்திடவில்லை. மேலும், திடீரென மக்காவின் மீது தாக்குதல் நடத்தி ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் அதனை வெற்றி கொண்டுவிட்டார்கள். இதற்குப் பின் பழைய அறியாமைக்கால அமைப்பு, தன் ஜீவமரணப் போராட்டத்தை ஹுனைன் களத்ததில் நடத்தியது. ஆனால், இந்தப் போராட்டமும் தோல்வியடைந்தது. மேலும், ஹுனைன் போரில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி, அரபுலகம் இப்போத இஸ்லாமிய நாடாகத்தான் விளங்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு இட்டுச் செனறது. இந்த நிகழ்ச்சி நடந்து ஓர் ஆண்டு கூட முழுமையடையவில்லை. அதற்குள் அரபுலகத்தின் பெரும்பாலான பகுதிகள் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் வந்துவிட்டன.

தபூக் போர்:-
மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்பே ரோமப் பேரரசுடன் போராட்டம் தொடங்கி விட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர் இஸ்லாத்தின் தூதை எடுத்தோத அரவு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் குழுக்களை அனுப்பி தை;தார்கள். அவற்றில் ஒன்று, வடதிசையில் சிரியாவின் எல்லையை ஒட்டியுள்ள (கிறிஸ்துவக்) குலங்களிடமும், இன்னொரு தூதுக்குழு புஸ்ரா நகரத்தின் கிறிஸ்துவத் தலைவரிடமும் சென்றிருந்தது. (ஆனால், இந்தத் தூதுக் குழுக்களின் பெரும்பாலான நபர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.) எனவே வருங்காலத்தில் சிரியாவின் எல்லைப் பகுதிகள் முஸ்லிம்களுக்கு அச்சமற்ற பாதுகாப்புன பிரதேசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு ஜமாதில் ஊலா மாதத்தில் மூவாயிரம் போர் வீரர்கள் கொண்ட ஒரு படையை சிரியா தேச எல்லையை நோக்கி அனுப்பினார்கள். இந்தச் சிறிய படை 'முஃத்தா' என்னுமிடத்தில் மன்னன் ஷுர்ஹபீலின் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட படையுடன் மோதியது. ஒருவருக்கு முப்பத்து மூன்று போர் எனும் விகிதாச்சாரத்தில் நடைபெற்ற இந்தப் போரிலும் இறைநிராகரிப்பாளர்களால் முஸ்லிம்களை வென்றிட முடியவில்லை. இந்த நிகழ்ச்சி தான் சிரியா தேசத்தையும் அதனையொட்டி வசித்துக் கொண்டிருந்த - அரைகுறை சுதந்தரம் பெற்ற அரபுக் குலங்களையும் - ஏன் இராக்கின் அருகில் வசித்துக் கொண்டிருந்த, மன்னன் கிஸ்ராவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நஜ்தீ குலங்களையும் கூட இஸ்லாத்தின் பால் ஈர்க்கச் செய்தது. இந்தக் குலத்தினர் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களாயினர். இதற்கு அடுத்த ஆண்டிலேயே கைஸர் மன்னர் (ஊநுயுளுநுசு) முஃத்தா போரில் தம்மைத் தேர்வியுறச் செய்த முஸ்லிம்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக சிரியா தேச எல்லையில் ராணுவ முஸ்தீபுகள் செய்யத் தொடங்கி விட்டார். நபி (ஸல்) அவர்கள் (இதைப் பற்றிய தகவல் கிட்டியதும்) ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் முப்பதாயிரம் போர்வீரர்களுடன் சிரியா நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள். தபூக் சென்றடைந்தவுடன், கைஸர் மன்னர் போர் செய்வதற்குப் பதிலாக எல்லையிலிருந்து தன் படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டார் எனத் தெரிய வந்தது. கைஸர் இப்படிப் பினவாங்கிக் கொண்டதனால் தமக்குப் கிடைத்த தார்மீக வெற்றியே இந்தக் கட்டத்தில் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். மேலும், தபூக்கிலிருந்து முன்னேறி சிரியா நாட்டு எல்லைக்குள் நுழைவதற்குப் பதிலாக இந்த வெற்றியின் வாயிலாக முடிந்தவரை அதிக அளவில் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கே முதலிடம் கொடுத்தார்கள். ஆகவே, நபியவர்கள் தபூக்கில் 20 நாட்கள் தங்கி ரோமப் பேரரசுக்கும் இஸ்லாமிய நாட்டுக்கும் இடையில் அமைந்திருந்த - இதுவரை ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து வந்த பல சின்னஞ்சிறு அரசுகளைத் தம் ராணுவ வலிமையைப் பிரயோகித்து இஸ்லாமிய அரசுக்குப் கப்பம் கட்டுபவையாகவும், அதன் கட்டளைக்குப் கட்டுப்பட்டு நடப்பவையாகவும் ஆக்கிக் கொண்டார்கள். இதனால் ஏற்பட்ட மிகப்nரும் பயன் யாதெனில், ரோமப் ரேரசுடன் ஒரு நீண்ட போராட்டத்தில் இறங்கும் முன்னர் அரபுலகத்தின் மீது தன் பிடியை வலுப்படுத்திக் கொள்ள முழுமையான சந்தர்ப்பம் இஸ்லாத்திற்குக் கிடைத்தது.

பிரச்சனைகளும் பொருளடக்கமும்:
1.  இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்ட பின்னர் அந்த நேரத்தில் எதிர்கொள்ள வேணடியிருந்த - இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்ற பெரும்பெரும் பிரச்சனைகளை நாம் எளிதில் வரையறுத்துக் கொள்ள முடியும்.
இப்பொழுது அரபுலகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு முற்றிலுமாக இறை நம்பிக்iயாளர்கள் வசம் வந்துவிட்டதால் அரபுலகத்தை முழுமையான ஓர் இஸ்லாமிய அரசாக மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் ஒன்றைத் தெளிவான முறையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாயிற்று. எனவே, பின்வரும் வகைகளில் அந்தச் செயல்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.


    அ.இஸ்லாத்தின் மையக் கேந்திரம் நிரந்தரமான, முழுமையான இஸ்லாமியக் கேந்திரமாய் மாறுவதற்காக இறைவனுக்கு இணைவைப்பது (ஷிர்க்) அரபுலகத்திலிருந்து அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகத் தான் இணைவைப்பாளர்களுடன் இனி எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும் அவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது இத்துடன் முடிவடைந்துவிட்டது என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.

    ஆ. இனி வருங்காலத்தில் இறையில்லமான கஅபாவை பராமரிக்கும் பொறுப்பு ஏகத்துவவாதிகள் வசமே இருக்கச் செய்தல். மேலும், இறையில்லத்தின் எல்லைகளுக்குள் இணைவைத்தல் மற்றும் அறியாமைக்கால அனைத்துச் சம்பிரதாயங்களையும் வலிமை கொண்டு தடுத்து நிறுத்தல. அத்துடன் இனி இணைவைப்போர் அந்த இல்லத்தின் எல்லைக்கு அருகில் கூட வரக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது.

    இ. ஆரபிகளின் சமூக வாழ்வில் இதுவரை எஞ்சியிருந்த அறியாமைக் காலச் சடங்குகளின் தாக்கங்களை அடியோடு களைவதில் கவனம் செலுத்தப்பட்டது. அந்தச் சடங்குகளில் சங்கைக்குரிய மாதங்களைத் தம் விருப்பப்படி மாற்றுவதாற்காக அவர்கள் ஏறபடுத்திக் கொண்ட நஸஃ எனும் மிகவும் கீழ்த்தரமான மரபு குறித்து நேரடியாக் கண்டிக்கப்பட்டுள்ளது.


2.  அரபுலகத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி முழுமை அடைந்த பிறகு அரபுலகத்திற்கு வெளியே சத்திய மார்க்கத்தின் செல்வாக்கை விரிவபடுத்தும் பணியின்பால் கவனம் செலுத்தப்பட்டது. இந்த முக்கியமான கட்டத்தில் முஸ்லிம்களுக்குத் தேவையான ஏவுரைகள் அருளப்பட்டன. அரபுலகத்திற்;;கு வெளியே வாழும் மக்களுக்கு - குறிப்பாக அரசுகளுக்கு சத்திய அழைப்பு தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் மறுத்துவிடலாம். அதற்கு அவர்களுக்கு முழு சுதந்தரம் உண்டு. ஆனால், தம் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டும் அக்கரமங்கள் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. ஆகவே, அவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்குக் கட்டுபட்டு வாழ சம்மதிக்க வேண்டும். அவ்வாறு சம்மதிக்கவில்லையெனறால் வாள் பலத்தைக் கொண்டு அவர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விடும்படி முஸ்லிமகளுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.


3.  மூன்றாவது முக்கிய விவகாரம் நயவஞ்சகர்கள் பற்றியதாகும். இதுவரை தற்காலித நலன்களைக் கருதி, கண்டும காணாது போல் அவர்களின் தவறுகளைப் பொறுத்துச் செல்லும்போது மேற்கொள்ளப்பட்டு வந்தது. இனி அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று இப்போது கட்டளையிடப்பட்டது. மேலும், பகிரங்கமாய் சத்தியத்தை நிராகரிப்பவர்களுடன் எந்தக் கடுமையான போக்கு மேற்கொள்ளப்படுகின்றதோ அந்தக் கடுமையான போக்கினையே இந்த மறைமுக நிராகரிப்பாளர்களிடமும் மேற்கொளள் வேண்டும் என்று இப்போது உத்தரவிடப்பட்டது.


4.  வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் சிலரிடம் இன்னும் ஒருசில பலவீனங்கள் எஞ்சியிருந்தன. அவற்றைக் களைய வேண்டியதும் அவசியமாயிற்று. எனவே, தபூக் போரின் போது சோம்பலும் பலவீனமு;ம காட்டியவர்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டனர். மேலும், இனி வருங்காலத்தில் இப்படி நேராமல் இருப்பதற்காக இறைவாக்கை மேலோங்கச் செய்வதற்காக மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சியும், இறைமறுப்புக்கும், இஸ்லாத்திற்கும் இடையிலான போராட்டமுமே ஒரு நம்பிக்கையாளனின் நம்பிக்கைப் பிரமாணத்தை உரைத்துப் பார்க்கும் உண்மையான உரைகல் என்ற மிகத் தெளிவாய் விளக்கிக் காட்டப்பட்டது.

8 அல் அன்ஃபால்

 அருளப்பட்ட காலம்:-
இந்த அத்தியாயம் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் பத்ருப் போருக்குப் பின்னர் இறங்கியதாகும். இஸ்லாத்திற்கும் இறைமறுப்பிற்கும் இடையே நடைபெற்ற முதல் போராகிய பத்ருப் போர் குறித்து இதில் விரிவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி:-
இந்த அத்தியாயத்தை ஆராய்வதற்கு முன் பத்ருப் போர் குறித்தும், அது தொடர்பான இதர நிலைகள் குறித்தும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் செலுத்துவது அவசியமாகும்.

நபி (ஸல்) அவர்களின் சத்திய அழைப்பு (மக்கா வாழ்க்கையின் இறுதிக் கட்டம் வரை) தனது உறுதியையும், வலிமையையும் இவ்விதம் நிலைநாட்டியிருந்தது: அதாவது, இந்த இயக்கம் ஒரு புறம் உயர்ந்த நடத்தையும், பெருந்தன்மையும், கூர்ந்த அறிவாற்றலும் மிகுந்த தலைவரைத் தன் பக்கபலமாகக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த அழைப்பை வெற்றிச் சிகரம் வரை எட்டச் செய்தே தீருவது என்ற உறுதியான நாட்டத்தை அத்தலைவர் கொண்டுள்ளார் என்பதை அவர் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தெளிவாக்கி விட்டிருந்தன. மற்றொரு பறம், இந்த அழைப்பு மனித உள்ளங்களையும் சிந்தனையையும் ஊடுருவிச் செல்லும் அளவுக்குத் தன்னுள் ஈர்ப்பாற்றலைப் பெற்றிருந்தது. எனினும், ஒருசில குறைபாடுகள் அந்த இயக்கத்தில் காணப்பட்டன. முதலாவதாக, இந்த அழைப்பிற்காக தன்னுடைய பொருள் அனைத்தையும் தியாகம் செய்வதற்கும், உலகம் முழுவதையும் எதிர்த்துப் போரிடுவதற்கும், தன்னுடைய நெருங்கிய உறவினர்களின் உறவைக் கூட அறுத்தெறிவதற்கும் தயாராகக் கூடிய மக்கள் போதிய அளவு இந்த இயக்கத்தில் சேர்ந்து விட்டார்கள் என்பது இன்னும் முழுமையாக நிரூபணமாகவில்லை. இரண்டாவதாக, இந்த சத்திய அழைப்பின் முழக்கம் நாடு முழுவதும் எட்டியிருந்தாலும் அதன் தாக்கங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. நன்கு அப்பிப்பிடித்துக் கொண்டிருந்த பழைய அஞ்ஞானகால அமைப்பைத் தீர்க்கமாக எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான கூட்டு வலிமை அப்போது அந்த அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருந்தோருக்குக் கிட்டியிருக்கவில்லை.

மூன்றாவதாக, இந்த சத்திய அழைப்பு நன்கு காலூன்றி நின்று தன்னுடைய நிலையை உறுதிப்படுத்தவும், தொடர்ந்து முன்னேறிச் செல்லவும் கூடிய வகையில் நாட்டின் எப்பகுதியும் பொருத்தமாக இருக்கவில்லை.

நான்காவதாக, இதுவரை நடைமுறை வாழ்வின் விவகாரங்களைத் தன் பொறுப்பில் ஏற்று நடத்தும் வாய்ப்பு அந்த சத்திய அழைப்பிற்குக் கிட்டவில்லை. எனவே, இந்த அழைப்பு வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், எந்த ஒழுக்க நெறிகளை நிலை நாட்டவும், நடைமுறைப்படுத்தவும் நாடியதோ அந்த ஒழுக்க நெறிகளை நிலை முழுமையாய் வெளிப்படுத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இந்த நான்கு குறைகளையும நிறைவுபடுத்தும் சூழ்நிலைகளைத் தோற்றுவித்தன.

மக்கா வாழ்க்கையின் கடைசி மூன்று நான்கு ஆண்டுகளில், இஸ்லாமியச் சூரியன் தனது ஒளிக்கதிர்களை யத்ரிப் (மதீனா) நகரில் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது! அங்கிருந்த மக்கள் பல்வேறு காரணங்களால் அரபுகளின் பிற குலத்தினரை விட மிக எளிதாக இந்த சத்திய ஒளியை ஏற்றுக் கொண்டிருந்தனர். இறுதியில் நபித்துவத்தின் 12ஆம் ஆண்டில் 'ஹஜ்'ஜின் போது 75 பேர் கொண்ட குழு ஒன்று நபியவர்களை நள்ளிரவில் சந்திதத்து. அக்குழுவினர், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுடன் நபியவர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுவோருக்கும் தம் நகரத்தில் இடம் அளித்து உதவுவதற்கும் தாங்கள் தயாராய் இருப்பதாய்த் தெரிவித்தார்கள்! அவர்களின் நோக்கம், இஸ்லாத்தில் இணைந்த முஸ்லிம்கள் அரபிகளின் பல்வேறு குலங்களிலும் பகுதியிலும் சிதறி வாழாமல், மதீனா நகருக்கு வந்து அங்குள்ள முஸ்லிம்களுடன் ஒருங்கிணைந்து ஒரு கட்டுக்கோப்பான சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு யத்ரிப் நகரம் 'மதீனத்துல் இஸ்லாம்' - இஸ்லாமிய நகரம் எனும் அமைப்பில் தன்னைத் தானே சமர்ப்பித்துக் கொண்டது. நபி (ஸல்) அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு அரபுலகத்தின் முதல் இஸ்லாமியக் கேந்திரத்தை அமைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு சமர்ப்பித்துக் கொண்டதற்கு என்ன பொருளோ அதை மதீனாவாசிகள் அறியாதிருக்கவில்லை. அதன் தெளிவான பொருள் இதுதான் : அதாவது, ஒரு சின்னஞ்சிறு நகரம், நாடு முழுவதிpலிருந்தும் கிளம்புகின்ற வாள்முனைகளையும் சமூக பொருளாதார பகீஷ்கரிப்புகளையும் எதிர் கொள்ள வேணடிய நிலைக்குத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டது. மற்றொரு புறம் இந்தச் செயல்முறையின் பொருள் என்ன என்பது மக்காவாசிகளுக்கும் தெரியாமலிருக்கவில்லை. இவ்வாறு, முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையிலும், வழிகாட்டலிலும் இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் கட்டுக்கோப்பான முறையில் ஒன்றுபட்டனர். இந்தக் கட்டுக்கோப்பும் ஒற்றுமையும் பழைய அறியாமைக்கால அமைப்புக்குச் சாவு மணியாய் விளங்கின.

மேலும் மதீனா போன்ற ஓர் இடத்தில் இவ்வாறு முஸ்லிம்களின் சக்தி ஒன்று திரள்வதனால் குறைஷிகளுக்கு ஒரு பேராபத்து காத்திருந்தது. அந்த பேராபத்து இது தான் - யமன் நாட்டிலிருந்து சிரியா தேசத்திற்குச் செல்லக்கூடிய வாணிபக் கூட்டங்களின் பிரதானச் சாலை செங்கடலின் கரையோரமாகத்தான் அமைந்திருந்தது. இந்தச் சாலை பாதுகாப்பாய் இருப்பதில்தான் குறைஷிகளுடையவும் இறைவைனுக்கு இணைகற்பிக்கும் ஏனைய பெரும் குலங்களுடையவும் பொருளாதார வாழ்க்கையே அமைந்திருந்தது. அத்தகைய சாலை இப்போது முஸ்லிம்களின் எல்லைக்குள் வந்து விட்டது. அன்றைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் உண்மையில் இந்த வர்த்தக சாலையின் மீதான தமது பிடியை இறுக்கிக் கொள்வதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு எந்த உபாயமும் இருக்கவில்லை.

எனவே, நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றவுடனேயே இந்தப் பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தலானார்கள். இது தொடர்பாக இரு முக்கிய உத்திகளைக் கையாண்டார்கள்.

முதல் உத்தி:- மதீனாவிற்கும் செங்கடலின் கரைக்கும் இடையில் அமைந்த இந்தப் பிரதான சாலைக்கருகில் வசித்துக கொண்டிருந்த சில குலத்தார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்கள். காரணம், அத்தகைய குலத்தினர் தம்முடன் நட்புறவுக் கொள்ள வேண்டும் அல்லது குறைந்த பட்சம் கோஷ்டி சேராமலாவது இருக்க வேண்டும என்பதற்காக! இந்த முயற்சியில் நபி (ஸல்) அவர்கள் முழுவெற்றி அடைந்தார்கள்.

இரண்டாம் உத்தி:- குறைஷிகளின் வாணிபக் கூட்டங்களை எச்சரித்திட இந்தப் பிரதானச் சாலையை நோக்கித் தொடர்ந்து சிறுசிறு படைகளை அனுப்பத் தொடங்கினார்கள். சில படைகளுடன் தாமே சென்றார்கள். அதே நேரத்தில் மறுபக்கத்திலிருந்து மக்காவாசிகளும் மதீனாவை நோக்கி சில வன்முறைக் கும்பல்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

நிலைமை வெகுவாக முற்றிக்கொண்டே வந்தது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் (கி.பி. 623 பிப்ரவரி அல்லது மார்ச்) மாதத்தில் குறைஷிகளின் மிகப்பெரிய வாணிபக்குழு ஒன்று சிரியா தேசத்திலிருந்து கிளம்பி, மக்கா நோக்கி மதீனாவின் எல்லையை ஒட்டிய இப்பகுதியை அடைந்தது. அக்குழுவிடம் ஏராளமான பொருட்கள் இருந்தன. பாதுகாவலர்கள் குறைவாய் இருந்தனர். முஸ்லிம்களின் வலுமிக்க படை ஏதேனும் அதன்மீது தாக்குதல் நடத்திடுமோ என்னும் அபாயமும் அதிகமாய் இருந்தது. எனவே இக்குழுவின் தலைவர் அபூ ஸுஃப்யான் இந்தப் பகுதியை அடைந்தவுடன் உதவி கேட்பதற்காக ஒரு மனிதரை மக்கா நோக்கி விரைவாக அனுப்பி வைத்தார். அந்த நபரின் தகவலை அடுத்து மக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. குறைஷிகளின் பெரும்பெரும் தலைவர்கள் எல்லாம், போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள். ஏறத்தாழ ஓராயிரம் போர் வீரர்களில் 600 போர் இரும்புக்கவசம் அணிந்தவர்கள். மேலும் 100 குதிரை வீரர்கள் கொண்ட குதிரைப்படை ஒன்றும் அதில் இருந்தது. இத்துணை முழு பலத்தோடும் ஆரவாரத்தோடும் அவர்கள் போரிடுவதற்குப் புறப்பட்டனர். தமது வாணிபக் கூட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டும வரவேண்டும் என்பது மட்டும் அவர்களின் நோக்கமாய் இருக்கவில்லை. மாறாக, எதிர்வரும் அபாயத்துக்கு ஒரு நிரந்தர முடிவு கட்டிவிட வேண்டும் என்றும் எண்ணத்துடன் அவர்கள் புறப்பட்டிருந்தார்கள். இத்தகைய சூழ்நிலைகளைத் தீர்க்கமாக அறிந்து கொணடிருந்த மாநபி (ஸல்) அவர்கள் தீர்ப்புக்கான நேரம் வந்து விட்டது என்று உணர்ந்து கொண்டார்கள். எனவே மதீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எத்தனையோ பல சிக்கல்கள் இருந்தும் கூட நபியவர்கள் ஒரு தீர்க்;கமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று முடிவு செய்து விட்டார்கள். பிறகு அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் ஒன்று கூட்டி அவர்கள் முன் நிலைமைகள் அனைத்தையும் தெளிவாக விளக்கினார்கள். ஒருபுறம் வடக்கிலிருந்து வாணிபக் கூட்டமும் மறுபுறம் தெற்கிலிருந்து குறைஷிகளின் படையும் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வென்றுவிடுவீர்கள் என்பது இறைவனின் வாக்குறுதி ஆகும். ஆகவே எந்தக் கூட்டத்தை நீங்கள் எதிர்க்கப் போகிறீர்கள் என்பதைக் கூறுங்கள் என்று நபியவர்கள் கேட்டார்கள். இதற்குப் பதிலளிக்கும வகையில் வாணிபக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தலாம் என பெரும்பாலரின் சார்பாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் எண்ணம் வேறொன்றாக இருந்தது. எனவே அவர்கள் அதே கேள்வியையே மீண்டும் கேட்டார்கள். இந்தக் கேள்விக்குப் பதிலாக முஹாஜிர்களில் மிக்தாத் பின் அம்ரு (ரலி) அவர்கள் உணர்ச்சி பொங்க பதில் அளித்தார்கள். (அதற்குப் பிறகு நாயகம் (ஸல்) அவரக்ள மீண்டும் அதே கேள்வியைக் கேட்க அன்ஸார்களைச் சேரந்த ஸஃதுப்னு முஆத் (ரலி) அவர்களும் உணர்ச்சிமிக்க ஒரு சொற்பொழிவை ஆற்றினார். அந்த சொற்பொழிவிலும் அவர் இதே கரு;தையே கூறினார்). அந்த இருவருடைய உரையின் சாரம் இதுதான் :'அல்லாஹ்வின்தூதரே! உங்கள் இறைவன்உங்களுக்கு எந்தத் திசையில் செல்லும்படி கட்டளையிடுகின்றானோ அந்தத் திசையிலேயே சென்று போரிடுங்கள். நாங்கள் உங்களுடன் இருப்போம்.' இந்தச் சொற்பொழிவுகளுக்குப் பின்னர் வாணிபக் குழுவுக்குப் பதிலாக குறைஷிகளின் படையைத்தான் எதிர் கொள்ளச் செல்ல வேண்டும் என்று முடிவாகியது. எனினும் இது ஒரு சாதாரணமான முடிவன்று! இத்தகைய குறுகிய காலகட்டத்திற்குள் போரிடுவதற்காக கிளம்பியவர்களின் எண்ணிக்கையோ முன்நூறை விடச் சிறிது அதிகமாக இருந்தது. மேலும், அவர்களிடம் போதிய போர்த் தளவாடங்களும் இருக்கவில்லை. எனவே அவர்களில் சிலர் உள்ளுக்குள் அஞ்சிக் கொண்டிருந்தனர். தெரிந்து கொண்டே மரணத்திற்கு இரையாகப் போவதாக அவர்கள் உணர்ந்து கொண்டனர். சுயநலவாதிகளான நயவஞ்சகர்கள் இந்த நடவடிக்கையை 'பைத்தியக்காரத்தனம்' என்று வர்ணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களும் உண்மையான இறைநம்பிக்கையாளர்களும் உயிரீந்து போராட வேண்டிய நேரம்இது என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவே அவர்கள் அல்லாஹ்வின் உதவியையே முழுமையாக நம்பி புற்ப்பட்டு விட்டார்கள். நேராக, குறைஷிகளின் படை வந்து கொண்டிருந்த தென்மேற்குத் திசையை நோக்கி நடைபோட்டார்கள். ஆனால், ஆரமபத்தில் வாணிபக் கூட்டத்தைக் கொள்ளையடிப்பது நோக்கமாயிருந்திருந்தால் வடமேற்குத் திசையை நோக்கி அவர்கள் சென்றிருப்பார்கள்.

ரமளான் 17இல் பத்ரு என்னுமிடத்தில் இரு தரப்பாரும் மோதிக்கொண்டனர். இந்தப் போரில் முஸ்லிம்களின் வாய்மை மிக்க இறைநம்பிக்கை, இறைவனிடமிருந்து பேருதவி என்னும் வெகுமதியைப் பெறுவதில் வெற்றி பெற்றுவிட்டது. அனைத்து வலிமைகளையும பெற்று, அதனால் ஆணவம் கொண்டிருந்த குறைஷிகள் அந்த நிராயுதபாணிகளான தியாக வீரர்களின் கரங்களால் தோல்வியைத் தழுவினர். இந்த தீர்க்கமான வெற்றிக்குப்பின் ஒரு மேற்கத்திய ஆராய்ச்சியாளரின் சொல்லுக்கேற்ப பத்ருப் போருக்கு முன்னர் இஸ்லாம் வெறும் ஒரு மதமாகவும், அரசியலாகவும் திகழ்ந்தது. ஆனால் பத்ருப் போருக்குப் பின்னர் அது ஓர் அரசாளும் மதமாக ஏன் அது ஒரு தனி அரசாகவே மாறிவிட்டது.

பொருளடக்கம்:-
இத்தகைய மகத்தான ஒரு போர் குறித்துத்தான் குர்ஆனின் இந்த அத்தியாத்தில் விமர்சிக்கப் பட்டுள்ளது. இந்த விமர்சனப் பாணி வெறும் உலகாதாய நோக்கம் கொண்ட அரசர்கள் தங்கள் படைகளின் வெற்றிக்குப் பின் செய்யும் விமர்சனப் பாணியை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

முதன்முதலில், அன்றைய சூழலில் ஒழுக்க ரீதியாக முஸ்லிம்களிடம் என்ன குறைகள் எஞ்சியிருந்தனவோ அவை குறித்து இந்த அத்தியாயத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஏனெனில் இனிமேல் முஸ்லிம்கள், அப்பழுக்கற்ற ஒழுக்கமுடையோராகத் திகழ முயலவேண்டும் எனபதற்காக! பின்னர், இந்த வெற்றியில் இறையுதவி எவ்வளவு பெரிய பங்கினை ஆற்றியுள்ளது என்பதும் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தம் வீரத்தையும் துணிவையும பற்றி பூரிப்படைந்து விடாமல் இறைவனின் வலிமையையே நம்பியிருக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வெண்டும் என்பதற்காகவுமே இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பிறகு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான இந்த அறப்போரை எந்தத் தார்மீகக் குறிக்கோளுக்காக நடத்த வேண்டும் என்பது இங்கு முஸ்லிம்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போராட்டத்தில் வெற்றியடையத் தேவையான ஒழுக்கப் பண்புகளும் அவர்களுக்கு உணர்த்தப்பட்டன.

பின்னர், இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்கள், யூதர்கள், இன்னும் போரில் கைதானவர்கள் ஆகிய அனைவர்க்கும் படிப்பினை தரும் பாணியில் உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.
பின்னர், போரில் கிடைத்த பொருள்களைப் பற்றி முஸ்லிம்களுக்கச் சில அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டத்தில் அடியெடுத்து வைத்த பின்பு மிகவும் அவசியமாக தெளிவுபடுத்த வேண்டியிருந்த போர் மற்றும சமாதானம் பற்றிய சட்ட திட்டங்கள் தொடர்பாக சில ஒழுக்க ரீதியிலான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிறகு இஸ்லாமிய அரசின் அரசியலைமப்புச் சட்டத்தினுடைய சில பிரிவுகளும் விளக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக இஸ்லாமிய அரசில் வாழுகின்ற முஸ்லிம் குடிகம்களின் சட்ட அந்தஸ்து இஸ்லாமிய நாட்டிற்கு வெளியே வசிக்கும் முஸ்லிம்களை விட்டு வேறுபடுத்தப்பட்டது.

7 அல் அஃராஃப்


பெயர்: இற்த அத்தியாயத்திற்கு அல் அஃராஃப் எனப் பெயரிட்டதற்குக் காரணம் இதனுடைய 46 வது வசனத்தில் 'அஸ்ஹாபுல் அஃராஃப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இறக்கி அருளப்பட்ட காலம்:-
இந்த அத்தியாயத்தின் கருத்துகளைச் சிந்தித்துப் பார்த்தால 6 ஆம் அத்தியாயமான 'அல் அன்ஆம்' அத்தியாயத்திற்கு எழுதிய முன்னுரையை ஒரு பார்வை பார்த்தாலே போதும்.

பொருளடக்கம்:
இந்த அத்தியாயத்தின் மையக் கருத்து, தூதுவத்துவம் பற்றி அழைப்பு விடுப்பதாகும். இறைவனால் அனுப்பப்பட்டிருக்கும் இறைத்தூதரைப் பின்பற்றுவதற்கு மக்களைத் தயார் படுத்துவதே இந்த உரைத்தொடரின் நோக்கமாகும். ஆயினும் அச்சுறுத்தி எச்சரிக்கும் பாணி மிக எடுப்பாக இந்த அத்தியாயத்தில் காணப்படுகிறது. ஏனெனில் இந்த அத்தியாயம் யாரை நோக்கி உரையாடப்படுகிறதோ அந்த மக்கா வாசிகளுக்கு இந்த அழைப்பை மீண்டும் மீண்டும் புரியவைப்பதிலேயே நீண்ட காலம் உருண்டோடி விட்டது. இனி இவர்களை அழைப்பதை விட்டுவிட்டு மற்ற மக்களை அழைக்கும்படி இறைத்தூதருக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுமோ என்கிற அளவுக்கு இந்த மக்களின் செவியேற்காத் தன்மையும், நெறி தவறிய போக்கும், பிடிவாதமும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன. இதனால் தான் விளக்கிக் கூறும் பாணியில் தூதுவத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அத்துடன் நீங்கள் உங்கள் தூதருக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் இதே போக்கினை உங்களுக்கு முன்பிருந்த சமூகங்களும் தத்தம் இறைத்தூதர்களுடன் மேற்கொண்டதால் மிகத் தீய கதிக்கு ஆளானார்கள் என்றும் எடுத்துக்காட்டப்படுகிறது. இவ்வாறாக, அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டு வந்த ஆதாரங்கள் முழுமை அடைய இருக்கும காரணத்தால் இந்த உரையின் இறுதிப் பகுதியில் சத்திய அழைப்பு, மக்கா வாசிகளை விட்டுவிட்டு வேதம் அருளப்பட்வர்களின் பக்கம் திருப்பப்பட்டது. மேலும், இப்போது ஹிஜ்ரத் மேற்கொள்ள (நாட்டை துறந்து செல்ல) அவர்கள் தமக்கு அருகிலுள்ளவர்களுக்கு மட்டும் சத்திய அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த கால கட்டம் முடியயப் போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாக இந்த அத்தியாயத்தின் ஓர் இடத்தில் உலக மக்கள் அனைவரையும் நோக்கி பொதுவாக உரையாடப்படுகிறது.

இந்த உரைத்தொடரின் போக்கு இடையில் யூதர்களை நோக்கித் திரும்புவதால் தூதுத்துவம் பற்றிய இந்த அழைப்பின் மற்றோர் அம்சமும் தெளிவாக்கப்பட்டுள்ளது:- அதாவது, இறை;தூதரின் மீது நம்பிக்கை கொண்ட பின்னர் அவர்களிடம் நயவஞ்சகத்தனமான போக்கினை மேற்கொள்ளல், மேலும், செவியேற்று வழிப்படுவதாகப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின் அதனை முறித்து விடுதல், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பகுத்தறியத் தெரிந்து கொண்ட பின்னர் அசத்திய வாதத்தில் மூழ்கிக் கிடத்தல் போன்ற செயல்களின் இறுதி கதி என்னவாகும் எனத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த அத்தியாயத்தின் இறுதியில் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அழைப்புப் பணியின் நுட்பம் பற்றிச் சில முக்கிய அறிவுரைகள் அருளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்ப்பாளர்களின் ஆத்திர மூட்டும் போக்குகள் மற்றும் கொடுஞ் செயல்களுக்கு எதிராக பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும். உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகி அசல் குறிக்கோளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கiயிலும் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

6 அல்அன்ஆம்

பெயர்: இந்த அத்தியாயத்தின் 137-144 வரையுள்ள வசனங்கில், சில கால்நடைகளைப் பயனபடுததுவது அனுமதிக்கப்பட்டது என்றும், சில கால்நடைகளைப் பயன்கடுத்துவது தடுக்கப்பட்டது என்றும் அவரபிகள் கொண்டிருந்த மூடநம்பிக்கைளைப் பயன்படுத்துவது தடுக்கப்ட்டது என்றும் அரபிகள் கொண்டிருந்த மூடநம்பிக்கைகளுக்கு மறுப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டே இந்த இத்தியாயத்pற்கு 'அல்அன்ஆம்' (கால்நடைகள்) என்று பெயரடப்பட்டுள்ளது.

இறக்கியருளப்பட்ட காலம்:
இப்னுன அப்பாஸ் (ரலி) அவர்கள், 'இந்த அத்தியாயம் முழுவதும் மக்காவில் ஒரே நேரத்தில் இங்கியது' என்று அறிவிக்கிறார்கள். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவரக்ளின் ஒன்றவிட்ட சகோதரி 'அஸ்மா பின் யஜீத்' (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கிக் கொண்டிருநதபோது அவர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்து கொண்nருந்தார்கள். நான் இந்த ஒட்டகத்தின் மூக்குக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தேன். வஹியின் சுமையைத் தாங்க முடியாமல் ஒட்டகத்தின் எலும்புகள் உடைந்து விடும்போல் எனக்குத் தோன்றியது!' அந்த இரவில் இந்த அத்தியாயம் இறங்கிதோ அதே இரவில் நபி (ஸல்) அவர்கள் இனை எழுதிக் கொள்ளச் செய்தார்கள் என்றும் அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

இந்த அத்தியாயத்தின் கருத்துக்களைச சிந்தித்துப் பார்த்தால், இது நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும் எனத் தெளிவாய்ப் புலப்படுகின்றது.

இறக்கியருளப்பட்ட சூழ்நிலை:
இந்த அத்தியாயம் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் இஸ்லாத்தின் பக்கம் கமக்களை அழைக்கத் தொடங்கி 12 ஆண்டுகள் கழிந்திருந்தன. குறைஷிகளின எதிர்பபும், கொடுமைகளும், அட்டூழியங்களும் உச்சநிலையை அடைந்திருந்த்ன. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தோரில் பெரும் எண்ணிக்கையினர், குறைஷகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பிறந்த நாட்டைத் துறந்து அபிஸீனியாவில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

பொருளடக்கம்: இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த அத்தியாயம் இறங்கியது. அதன் கருத்துக்களை ஏழு கெருந்தலைப்புகளாகப் பிரிக்கலாம்.

(1) ஷிர்க் (இறைபனுக்கு இணைவைத்தல்) அசத்தியமானது என்று நரூபித்தல், ஓரிறைக் கோட்பாட்டின் பக்கம் அழைப்பு வடுத்தல்!

(2) மறுமைக் கோட்பாடடினை எடுத்துரைத்தல்.

(3) அஞ்ஞான கலத்;து மூடநம்பிக்கைகளை மறுத்துரைத்தல்.

(4) எத்தகைய உயர்ந்த ஒழுக்க நெறிகளின் அடிப்படையில் .ஸ்லாம் மனித சமூகத்தை அமைக்க விருப்பியதோ அவற்றைப் பேளும்படி அறிவுறுத்தல்.

(5) நபி (ஸல்) அவர்களுக்கம், அவர்களின் அழைப்புக்கும் எதிராக மக்கள் எழுப்பிய ஆடசேபணைகளுக்குப் பதலளித்தல்.

(6) நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்கள் அனைவர்களுக்பு; பதிலளித்தல்.

(7) இறைமறுப்பாளர்களுக்கும் எதிரிகளுக்கும் அறிவுரைபகர்தல், அச்சுறுத்தி எச்சரிக்கை செய்தல்.

மக்கா வாழ்ககையின் காலகட்டங்கள்: மக்காவில் அருளப்பட்ட ஓர் விரவான அத்தியாயம் இங்குதான் முதன்முதலாக நம் முன் வருகிறது. இந்த இடத்தில் மக்காவில் இறங்கிய இத்தியாயங்களின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றி ஒரு பொதுவான விளக்கம் அளிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இனி வர்ககூடிய மக்கத்து அத்தியாயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வதும், அவற்றின் விரிவுரை தொடரபான நம் குறிப்புகளை விளங்கிக் கொள்வதும் இதனால், எளிதாகி விடும்!.

மதீனாவில் இறங்கிய அத்தியாயங்களைப் பொருத்தவரை அவை ஒவ்வொன்றும் இறங்கிய காலகட்டத்தை இலகுவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அல்லது ஒரு சிறு ஆய்வின் மூலம் அதை நிர்ணயித்திட முடியும்! சொல்லப் போனால் அந்த அத்தியாயங்களின் அனேக வசனங்கள் இறங்கியதற்கான தனித்தனிக் காரணங்கள் கூட நம்பத்தகுந்த அறிவிப்புகள் மூலம் கிடைத்துவிடுகின்றன. ஆனால் மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களுக்குரிய காலம் பற்றி நம்மிடம் அத்தகைய விரிவான விவரங்கள் இல்லை. மக்கத்து அத்தியாயங்களில் மிகக் குறைவான அத்தியாயங்கள் அல்லது வசனங்கள் இறங்கிய காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் பற்றித் தான் நம்பத்தக்க சரியான அறிவிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இதனால் மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்கள் தொடர்பாக வரலாற்று ஆதாரங்களை விட அகச்சான்றுகளையே நாம் அதிகம் நம்ப வேண்டி உள்ளது. பல்வேறு அத்தியாயங்களின் தலைப்பு, கருத்து, விளக்கும் பாணி ஆகியவற்றிலும், அந்த அத்தியாயங்களின் வரலாற்றுப் பின்னணி பற்றி அவற்றில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ உள்ள சமிக்கைகளிலும் அந்த அகச் சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், இத்தகைய அகச்சான்றுகளின் துணைகொண்டு ஒவ்வோர் அத்தியாயத்தைப் பற்றியும் ஒவ்வொரு வசனத்தைப் பற்றியும் இது இன்ன தேதியில், இன்ன ஆண்டில், இன்ன சந்தரப்பத்தில் இறங்கிற்று என்று துல்லியமாக நிர்ணயித்திட முடியாது என்பது வெளிப்படை.

ஓரளவு சரியான முறையில் நம்மால் செய்ய முடிவது இதுதான்:

ஒருபுறம் மக்காவில் அருளப்பெற்ற அத்தியாயங்களின் அகச்சான்றுகளை வைத்துக் கொள்ள வேண்டும். மறுபுறம் நபி (ஸல்) அவர்களுடைய மக்கா வாழ்க்கையில் வரலாற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் ஒப்பு நோக்கி பார்த்து எந்த அத்தியாயம் எந்தக் காலக்கட்டத்துடன் தொடர்புடையது என்பதைக் கணித்துவிடவேண்டும். இந்த ஆய்வு முறையைக் கருத்தில் கொண்டு நாம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையை உற்று நோக்கினால், அது இஸ்லாமிய அழைப்புப் பணியின் அடிப்படையின் நாற்பெரும் காலக்கட்டங்களாக அமைந்திருப்பதைக் காணலாம்.

முதற்கட்டம்: அண்ணலார் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டது முதற்கொண்டு நபித்துவத்தை பிரகடனப்படுத்தியது வரையிலுள்ள காலக்கட்டம் - ஏறக்குறைய மூன்றாண்டுகள். இந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு மட்டும் மறைமுகமாக இஸ்லாமிய அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. மக்காவின் பொதுமக்களுக்கு இது பற்றித் தெரியாதிருந்தது.

இரண்டாவது கட்டம்: நபித்துவத்தை பிரகடனப்படுத்திய காலம் முதல் முஸ்லிம்களுக்கு கொடுமைகள் இழைக்கத் தொடங்கிய - அடிக்கடி அவர்களைத் துன்புறுத்தத் தொடங்கிய (pநசளநஉரவழைn) காலம் வரை - அதாவது ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம்  நீடித்தது. இந்தக் காலக்கட்டத்தில் தான் முதன்முதலாக இஸ்லாத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் அந்த எதிர்ப்பு இஸ்லாத்தை ஏற்க விடாமல் தடுக்கும் போக்காக வடிவெடுத்தது. பின்னர் எள்ளி நகையாடல், பரிகாசம் செய்தல், வீண்பழி சுமத்தல், வசை பாடல், பொய்ப்பிரச்சாரம் செய்தல், கோஸ்டி சேர்த்தல் வரை இது சென்றது. இறுதியில் மிகவும் ஏழைகளாயும், பலவீனர்களாயும் ஆதரவற்றவர்களாயும் இருந்த முஸ்லிம்களின் மீது அக்கிரமங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

மூன்றாவது கட்டம்: சோதனைக் காலத்திலிருந்து (அதாவது, நபித்துவத்தின் 5 - ஆம் ஆண்டிலிருந்து) அபுத்தாலிப் மற்றும் கதீஜா (ரலி) ஆகியோர் மரணமாகும் (நபித்துவத்தின் 10-ஆம் ஆண்டு) வரை ஏறத்தாழ 5,6 ஆண்டுகள் நீடித்தது. இந்தக்கட்டத்தில் பகைவர்களின் எதிர்ப்பு மிகக் கடுமையாகிக் கொண்டு செனறது. முஸ்லிம்கள் பலர் மக்காவில் இருந்த நிராகரிப்பாளர்களின் கொடுமைகளையும், துன்பங்களையும் பொருக்க முடியாமல் அபிஸீனியாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தார்களும் மற்ற முஸ்லிம்களும் சமூக - பொருளாதார விலக்கல் செய்யப்பட்டனர். நபி அவர்களும், அவர்களின் ஆதரவாளர்கள், தோழர்கள் அனைவரும் ஷுஅப் அபுதாலிப் கனவாயில் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்டு இருந்தார்கள்.

நான்காம் கட்டம்: நபித்துவத்தின் 10 ஆம் ஆண்டிலிருந்து 13 - வது ஆண்டு வரை ஏறத்தாழ 3 ஆண்டுகள் நீடித்தது. இக்காலக் கட்டம் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் உற்ற தோழர்களுக்கும் பயங்கரமான முறையில் கொடுமைகளும், துன்பங்களும் இழைக்கப்பட்டக் காலக்கட்டமாகும். எந்த அளவுக்கெனில் நபி அவர்கள் மக்காவில் இனி வாழ முடியாது என்ற நிலை இதனால் உருவாகியது. இறுதியில் அல்லாஹ்வின் அருளால் மதினாவசிகளான அன்ஸார்களின் உள்ளங்கள் இஸ்லாமிய அழைப்பின் பக்கம் வளர்ந்தன. அவர்களுடைய அழைப்பின் பேரில் நபி அவர்கள் மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

மேற்சொன்ன காலகட்டங்கள் ஒவ்வொன்றிலும் குர்ஆனுடைய எந்த அத்தியாயங்கள் இறங்கினாலும் அவற்றில் அந்தக் காலக்கட்டத்தின் தனித்தன்மைகளின் தாக்கங்கள் எடுப்பாகக் காணப்படுகினறன. இத்தகைய அடையாளங்ளை அடிப்படையாகக் கொண்டு இனிவரும் மக்கத்து அத்தியாயங்களின் முன்னுரைகளில் அந்தந்த அத்தியாயங்கள் மக்காவில் எந்தக்காலக்கட்டத்தில் என்பதைப் பார்க்கலாம்.

5 அல்மாயிதா

பெயர்: இதன் 112-ஆவது வசனத்தில் வருகின்ற 'அல்மாயிதா' என்னும் சொல், இந்த அத்தியாயத்தின் பெயராய்ச் சூட்டப்பட்டுள்ளது.

இறக்கியருளப்பட்ட காலம்: இந்த அத்தியாயத்தின் கருத்துகளிலிருந்து, இது ஹுதைபியா உடனபடிக்கைக்குப் பிறகு ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலோ, 7-ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலோ இறக்கி அருளப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. பல அறிவிப்புக்களும் இதனையே மெய்ப்பிக்கின்றன. ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு துல்கஃதா மாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது: நபி (ஸல்) அவர்கள் 1400 முஸ்லிம்களுடன் உம்ராவை நிறைவேற்றுவதற்காக மக்கா நகர் சென்றார்கள். ஆனால், இறைமறுப்பாளர்களான குறைஷிகள், பகைமை வெறியில் அரபுலகத்தின் தொன்மையான சமய மரபுகளுக்கு மாறாக நபியவர்களை உம்ரா செய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள். கடும் வாக்குவாதங்களுக்குப் பிறகு அடுத்த் ஆண்டு நபியவர்கள் இறையில்லத்தை தரிசிக்க வரலாம் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சந்சர்ப்பத்தில், முஸ்லிமகளுக்கு ஒருபுறம் கஅபாவைத் தரிசிப்பதற்கான பயண ஒழுங்கு முறைகளை விவரித்தச் சொலிவது அவசியமாயிற்று. மறுபுறம் இறைவனை நிராகரிக்கும் பகைவர்கள்,
முஸ்லிம்களை உம்ரா செய்யவிடாமல் தடுத்து வரமபுமீறி நடந்து கொண்டதற்குப் பதிலடியாக முஸ்லிம்களும் விருமபத்தகாத வரம்பு மீறிய செயல்களில் இறங்கி விடக் கூடாது என்று அவர்களுக்கு வலியுறுத்துவதும் அவசியமாயிற்று. ஏனெனில் ஹஜ்ஜுக்குச் செல்லவேண்டிய பாதைகள் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் அமைந்திருந்தன. இறைவனை நிராகரிக்கும் பற்பல கோத்திரத்தார் அந்த பாதைகளைக் கடந்துதான் ஹஜ்ஜுக்குப் போக வேண்டியிருந்தது. எனவே, எவ்வாறு முஸ்லிம்கள் இறையில்லத்தைத் தரிசிப்பதை விட்டுத் தடக்கப்பட்டார்ளோ, அவ்வாறே முஸ்லிம்களுடைய பகுதிகளைக் கடந்து செல்கின்ற அந்த இறைநிராகரிப்பாளர்களளையும் தடுத்து நிறுத்திட முஸ்லிம்களுக்கு வாய்ப்பு இருந்தது.

இறக்கியருளப்பட்ட சூழ்நிலை: 'ஆலு இம்ரான்', 'அன்னிஸா' ஆகிய இரு அத்தியாயங்கள் இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்து இந்த அத்தியாயம் இறங்கும் காலம் நெருங்க நெருங்க சூழ்நிலைகளில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆரம்பத்தில் உஹதுப் போரில் முஸ்லிம்கள் அடைந்த துன்பங்களும், மதீனாவின் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுகம் முஸ்லிம்களுக்கு ஆபத்தானவையாய் ஆக்கிவிட்டிருந்தன. ஆனால் இப்போதோ நிலைமை முற்றிலும் தலைகீழாய் மாறி இருந்தது. அரபுலக்கத்தில் வீழ்த்த முடியாத ஒரு சக்தியாக இஸ்லாம் விளங்கத் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய அரசு ஒருபுறம் நஜ்து பிதேசம் வரையிலும் இன்னொரு புறம்  அன்றைய ஷாம் (ஸிரியா) எல்லைகள் வரையிலும், மற்றொருபுறம் மக்காவின் அண்மைப் பகுதிகள் வரையிலும் பரவிவிட்டது. அப்போது இஸ்லாம் உள்ளங்களிலும், அறிவிலும் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் கொள்கை, கோட்பாடாக இருக்கவில்லை. மாறாக, தன் எல்லைகளுக்குள் வசிப்போர் அனைவரின் வாழ்வின் மீதும் செயலுருவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அரசாகவும் திழ்ந்தது.

இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய நெறிகளின்படியும் இஸ்லாமிய கண்ணோட்டத்திற்கேற்பவும், முஸ்லிம்களுக்கென்று தனியொரு பண்பாடு உருவாகிவிட்டிருந்தது. அந்தப் பண்பாடு வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் மற்ற பண்பாடுகளிலிருந்து வேறுபட்டுத் தனிச் சிறப்பும் பெருமையும் கொண்டு திகழ்ந்தது.

ஒழுக்கம், சமூகவியல், நாகரிகம் ஒவ்வொன்றிலும் இப்போது முஸ்லிமகள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டுத் தங்களுக்கென்று தனித் தன்மைகளைப் பெற்றுத் திகழ்நதனர். இஸ்லாமிய வாழ்க்கை இவ்விதம் முழுமையாக உருப்பெற்று விட்ட பின்னர் - தமக்கெனத் தனிச் சிறப்புடைய நாகரிகத்தைப் பெற்றுவிட்ட இந்த முஸ்லிமகள் - மீண்டும் எப்போதேனும் தம் பழைய வாழக்ககை;குத் திருமபுவர் என்ற நமபிக்கையை முஸ்லிம்கல்லாதார் முற்றிலும் இழந்துவிட்டனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்பு வரை முஸ்லிம்களின் முன்னேற்றப் பாதையில் பெரியதொரு முட்டுகட்டையாய் இருந்தது என்னவெனில், அவர்கள் குறைஷ் நிராகரிப்பாளர்களுடன் ஒரு தொடர் போராட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்தனர். அதனால் தம் அழைப்புப் பணியை விரிவுபடுத்திட அவர்களுக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தது. வெளித்தோற்றத்தில் தேல்வியாகவும், உண்மையில் வெற்றி வாய்ப்பாகவும் திகழ்ந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை இந்த முட்டுக்கட்டையை அகற்றிவிட்டது. இதனால் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய அரசாங்க எல்லைகளுக்குள் அமைதி கிட்டியது மட்டுமின்றி, மதீனாவின் சுற்றுப்புறப் பகுதிகளுக்கெல்லாம் இஸ்லாத்தின் அழைப்பை ஏந்திப் பரவலாகச் செய்வதற்கு அவர்ளுக்குப் போதிய வாய்ப்பும் நேரமும் கிடைத்துவிட்டது. இந்த அத்தியாயம் இறங்கிய பொழுது இருந்த நிலைமைகள்தாம் இவை.

பொருளடக்கம்: இந்த அத்தியாயம் முப்பெரும் கருத்துக்கூறுகளைக் கொண்டுள்ளது.

1. முஸ்லிம்களின் சமய நாகரிக அரசியல் வாழ்வு பற்றி இன்னும் பல சட்டங்கள் ஏவுரைகள் வழங்குவது இந்தக் கருத்துத்தொடரில் ஹஜ்ஜுப் பயணத்தின் ஒழுங்குமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டன. இறைச்சின்னங்களைக் கண்ணியப்படுத்தும்படியும் கஅபாவை தரிசிக்க வருவோர்க்குத் தொல்லை கொடுக்காதிருக்கும்படியும் கட்டளையிடப்பட்டது. உண்ணும், பருகும் பொருள்களில் ஹராம் (தடுக்கப்பட்டவை) ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) ஆகியவைக் குறித்துத் தீர்க்கமான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. மேலும் அறியாமைக் காலத்தில், தாமாகவே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டோருடன் அமர்ந்து உண்ணவும், பருகவும் அவர்களின் பெண்களை மணம்புரிந்து கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. ஒளு, முழுக்கு, தயம்மும் ஆகியவற்றின் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன. கலகம் புரிதல், குழப்பம் விளைத்தல் களவு ஆகியவற்றுக்கான தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்டன. மதுவும், சூதாட்டமும் திட்டவட்டமாக ஹராமாக்க (தடை செய்ய)ப் பட்டன. சத்தியத்தை முறித்து விட்டால் அதற்கான குற்றப்பரிகாரம் - கஃப்ஃபாரா நிர்ணயிக்கப்பட்டது. மேலும், (டயற ழக நஎனைநnஉந) சாட்சியம் தொடர்பான சட்டதிட்டங்களில் இன்னும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

2.முஸ்லிம்களுக்கு அறிவுரை:
இப்போது முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் குழுவினராய்த் திகழ்வதால் அவர்களை நோக்கி நீங்கள் நீதியில் நிலைத்திருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும்  வலியுறுத்தப்பட்;டது. உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களுடைய போக்கிலிருந்து விலகியிருந்து நீங்கள் உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும் , அல்லாஹ்வுக்கு வழிபட்டு, அடிபணிந்து நடப்பதாகவும், அவனது கட்டளைகளைப் பின்பற்றி வாழ்வதாகவும் நீங்கள் அளித்துள்ள வாக்குறுதியின் மீது உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது. மேலும், யூதர்கள், எந்த கதிக்கு உள்ளானார்களோ அந்த கதிக்கு நீங்களும் உள்ளாகாதீர்கள என்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.

3. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அறிவுரை: யூதர்களின் வலிமை இப்போது தகர்ந்துபோய் இருந்தது. மேலும், அரபுலகத்தின வட பகுதியில் ஏறக்குறைய யூதர்களடைய வல்லா ஊர்களும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் வந்துவிட்டிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு முறை யூதர்களுடைய தவறான போக்கு பற்றி எச்சரிக்கப்படுள்ளது. மேலும் நேரிய வழிக்கு வந்துவிடுமபடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹுதைபிய்யா உடன்படிக்கiயினால் அரவு நாடு அனைத்திலும் இஸ்லாமிய அழப்பைப் பரப்புவதற்கான வாய்ப்புக் கிட்டியிருந்த காரணத்தால், கிறிஸ்துவர்களை நோக்கியும் விரிவான முறையில் அவர்களுடைய கொள்கைகளின் தவறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், நம்பிக்கை கொள்ளுமபடியும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

4 அன்னிஸா

அருளப்பெற்ற காலமும் கருத்துக் கூறுகளும்:

இந்த அத்தியாயம் பல உரைத்தொடர்களைத் தாங்கியுள்ளது. அவ்வுரைத் தொடர்கள் பெரும்பாலும் ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி, அல்லது ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பல்வேறு கால கட்டங்களில் இறங்கியிருக்கக் கூடும். எனினும் எங்கிருந்து எங்குவரையுள்ள வசனங்கள் ஒரே உரைத்தொடராக இறங்கின, அவை இறங்கிய சரியான காலம் எது என்று துல்லியமாக நிர்ணயிப்பது கடினமாகும். ஆயினும் அந்த உரைத்தொடர்களில் சில சட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டும் வசனங்கள் உள்ளன. ஹதீஸ் அறிவிப்புகள் அவற்றின் காலத்தை உணர்த்துகின்றன. அவற்றின் துணை கொண்டு அந்த உரைத்தொடர்கள் அருளப்பட்ட காலத்தை நாம் மேலோட்டமாக வரையறுக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, சொத்துப் பங்கீட்டு முறை மற்றும் அநாதைகளின் உரிமைகள் தொடர்பான அறிவுரைகள், உஹதுப் போரில் முஸ்லிம்களில் எழுபது பேர் ஷஹீதாகிவிட்ட பின்னர் இறங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம். இதனை அடிப்படையாக வைத்து, தொடக்கத்திலுள்ள 1 முதல் 28 வரையுள்ள வசனங்கள் இதே காலகட்டத்தில்தான் இறங்கியிருக்க வேண்டும் என்று நாம் கணிக்க முடிகிறது.

ஸலாத்துல் கவ்ஃப் (போர் போன்ற அச்சமிக்கச் சூழ்நிலையில் நிறைவேற்றப்படும் தொழுகை) பற்றிய தகவல் 'தாத்துர் ரிகாஃ' போர் குறித்த ஹதீஸ் அறிவிப்புகளிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. இப்போர் ஹிஜ்ரி 4-ஆண்டு நடைபெற்றது. எனவே, இந்தத் தொழுகை முறையை விளக்குகின்ற 101 முதல் 104 வரையுள்ள வசனங்கள் இடம் பெற்றுள்ள உரைத்தொடர், இப்போரை ஒட்டிய காலகட்டத்தில்தான் இறங்கியிருக்க வேண்டும் என்று நாம் கணிக்கலாம். மதீனா நகரிலிருந்து பனூநுளைர் எனும் யூதக் குலத்தாரை வெளியேற்றிய நிகழ்ச்சி ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாத்தில் நடந்தது. எனவே யூதர்களுக்கு, 'உங்கள் முகங்களை நாம் உருக்குலைத்து, பின்பக்கமாகத் திருப்பி விடுவதற்கு முன் இறைநம்பிக்கை கொண்டு விடுங்கள்!' எனும் இறுதி எச்சரிக்கை வசனம் 47-இல் காணப்படுகிறது. எனவே, இவ்வசனம் இடம்பெற்றுள்ள உரைத்தொடர் இக்கூட்டத்தாரை வெளியேற்றுவதற்குச் சற்று முந்திய காலத்தில்தான் இறங்கியிருக்கும் என்று பெரும்பாலும் கணிக்கப்படுகிறது.

மேலும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்வதற்கான அனுமதி ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டில் நடைபெற்ற பனூமுஸ்தலிக் போரின் போது வழங்கப்பட்டது. எனவே 'தயம்மும்' பற்றிக் குறிப்பிடுகின்ற வசனம் 43 முதல் 50 வரையுள்ள உரைத்தொடர் இந்தப் போரையொட்டிய காலகட்டத்திலேயே இறங்கியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அருளப்பெற்ற சூழ்நிலையும், பொருளடக்கமும்:

இவ்விதம், இந்த அத்தியாயம் அருளப்பெற்ற காலகட்டம் பற்றி ஒட்டு மொத்தமாகத் தெரிந்து கொண்டதற்குப் பின்னால் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றையும் ஒருமுறை நோட்டமிட்டுக் கொள்வது இன்றியமையாதது. ஏனெனில் அத்தியாயத்தின கருத்துக்களைப் புரிந்து கொள்ள இது நமக்குத் துணை செய்யும்.

அந்த நேரத்தில், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன்பு இருந்த பணியினை முப்பெரும் பகுதிகளாய்ப் பிரிக்கலாம்.

(1)ஹிஜ்ரத்திற்குப் பிறகு உடனடியாக மதீனாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் வேர்விடத் தொடங்கியருந்த கட்டுப்கோப்பான புதிய இஸ்லாமியச் சமுதாயத்தை பேணிப் பாதுகாத்து வளரச் செய்தல்.

(2)இறைவனுக்கு இணை கற்பிக்கும் அரபிகள் மற்றும் யூத நயவஞ்சகர்கள் ஆகிய சீர்திருத்தத்திற்கு எதிரான சக்திகளுடன் போராடி அவற்றை முறியடித்தல்.

(3) இத்தகைய எதிர்ப்புச் சக்திகளைப் பொருட்படுத்தாமல் இஸ்லாத்தின் அழைப்பை மேலும் பரவலாக்குதல்.

இந்தச் சூழு;நிலையில் அல்லாஹ் இறக்கியருளிய அத்தனை உரைத்தொடர்களும் இம்முப்பெரும் பிரவுகளுடன் தொடர்புடையவையே!

இஸ்லாமியச் சமுதாயத்தை ஒழுங்குற அமைப்பதற்காக, அத்தியாயம் 2 'அல்பகறா' வில் வழங்கப்பட்ட அறிவுரைகளை விட இன்னும் அதிகமான அறிவுரைகள் இப்போது அந்தச் சமுதாயத்திற்குத் தேவைப்பட்டன. இதனால்தான் அன்னிஸா அத்தியாயத்தின் இந்த உரைத்தெடர்களில் முஸ்லிம்கள் தம் கூட்டு வாழ்வை எவ்வாறு இஸ்லாத்தின் வழிமுறைப்படி சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரிவாகக் கூறப்பட்டது. வேதம் அருளப்பட்டோரின் ஒழுக்கம் மற்றும் அவர்களுடைய மார்க்க நடைமுறைகளை விமர்சித்து தங்களுக்கு முன்சென்ற இற்தச் சமுதாயத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதிருக்கும்படி முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நயவஞசகர்களின் போக்கை விமர்சித்து உண்மையான இறைநம்பிக்கையின் தேட்டங்கள் எவையென தெளிவாக்கப்பட்டன.

சீர்திருத்தத்தை எதிர்க்கும் சக்திகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம் உஹதுப் போருக்குப் பின்னர் மிகவும் சிக்கலான கட்டத்தை எட்டிவிட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் அல்லாஹ் ஒருபுறம் உணர்ச்சியூட்டும் உரைகளின் வாயிலாக பகைவர்களை எதிர்த்துப போரிட முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினான். மறுபுறம் போர்க்காலங்களில் பணியாற்றிட  வேண்டிய பல்வேறு முக்கியமான ஏவுரைகளை அளித்தான்.

முஸ்லிம்கள் அடிக்கடி பெரிய, சிறிய போர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலும், தண்ணீர் கிடைக்காத பாதைகளின் வழியாய் பயணம் செய்ய வேண்டியிருந்தது. எனவே தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், குளிப்பதற்கும் உளூ செய்வதற்கும் பதிலாக தயம்மும் செய்து கொள்ள அனுமதி அளிக்கபபட்டது. மேலும், இத்தகைய பயண வேலைகளில் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. அபாயம் நிறைந்த இடங்களில் 'ஸலாத்துல் கவ்ஃப்' எனும் தொழுகையை நிறைவேற்றும் வழிமுறையும் எடுத்துரைக்கப்பட்டது. அரபுலகின் பல்வேறு பகுதிகளில் இறைநம்பிக்கையற்ற கூட்த்தார்களுக்கிடையே விரவி வாழ்ந்த முஸ்லிம்களுக்கு விரிவான ஏவுரைகள் இந்த உரைத்தொடர்களில் வழங்க்கப்பட்டன. யூதர்களின் வஞ்சகம் முற்றும் மன முரண்டான போக்கு பற்றியும் அவர்களின் ஒப்பந்த மீறல்கள் பற்றியும் வன்மையாகக் கடிந்துரைக்கப்பட்டது. மேலும் தெளிவான வார்த்தைகளால் இத்தகையவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுவிக்கப்பட்து.

நயவஞ்சகர்களின் பல்வேறு வகுப்பினர் பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் தனித்தனி வுகுப்பினராய் பிரித்து ஒவ்வோர் வகுப்பினர் குறித்தும் இவர்களிடம் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

நடுநிலை என்று முஸ்லிமகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த குலத்தார்களோடு முஸ்லிமகள் மேற்கொள்ள வேண்டிய நடத்தை என்னவென்றும் தெளிவுபடுத்தப்பட்டது - இத்தகைய நிலiயில் அனைத்தையும்விட முக்கியமாகத் தேவைப்பட்டது எதுவெனில், முஸ்லிமகளின் நடத்தை மாசு மறுவற்றுத் திகழ வேண்டும என்பதே! ஏனெனில் அசத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் விரல் விட்டு எண்ணத்தக்க மிகச் சிறிய கூட்டம் வெற்றி காண முடியுமெனில் தன்னுடைய உயர் பண்புகளின் வலிமையினால்தான் வெற்றி பெற முடியும். இதனால்தான் முஸ்லிம்களுக்கு உயர்ந்த பண்பாடுகள் பற்றிய அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்ட ஒவ்வொரு குறைபாடும் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

இஸ்லாத்தின் சீர்திருத்த அழைப்பைத் தெளிவுபடுத்துவதுடன் யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இறைவனுக்கு இணைவைப்போர் ஆகிய மூன்று குழுவினரின் தவறான மதக்கருத்தோட்டங்கள், தவறான பண்பாடுகள், செயல்களைப் பற்றியும் இந்த அத்தியாயத்தில் விமர்சனம் செய்து அவர்களுக்கு சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பும் விடுவிக்கப்பட்டிருக்கிறது.