5 அல்மாயிதா

Monday, September 5, 2011

பெயர்: இதன் 112-ஆவது வசனத்தில் வருகின்ற 'அல்மாயிதா' என்னும் சொல், இந்த அத்தியாயத்தின் பெயராய்ச் சூட்டப்பட்டுள்ளது.

இறக்கியருளப்பட்ட காலம்: இந்த அத்தியாயத்தின் கருத்துகளிலிருந்து, இது ஹுதைபியா உடனபடிக்கைக்குப் பிறகு ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலோ, 7-ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலோ இறக்கி அருளப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. பல அறிவிப்புக்களும் இதனையே மெய்ப்பிக்கின்றன. ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு துல்கஃதா மாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது: நபி (ஸல்) அவர்கள் 1400 முஸ்லிம்களுடன் உம்ராவை நிறைவேற்றுவதற்காக மக்கா நகர் சென்றார்கள். ஆனால், இறைமறுப்பாளர்களான குறைஷிகள், பகைமை வெறியில் அரபுலகத்தின் தொன்மையான சமய மரபுகளுக்கு மாறாக நபியவர்களை உம்ரா செய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள். கடும் வாக்குவாதங்களுக்குப் பிறகு அடுத்த் ஆண்டு நபியவர்கள் இறையில்லத்தை தரிசிக்க வரலாம் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சந்சர்ப்பத்தில், முஸ்லிமகளுக்கு ஒருபுறம் கஅபாவைத் தரிசிப்பதற்கான பயண ஒழுங்கு முறைகளை விவரித்தச் சொலிவது அவசியமாயிற்று. மறுபுறம் இறைவனை நிராகரிக்கும் பகைவர்கள்,
முஸ்லிம்களை உம்ரா செய்யவிடாமல் தடுத்து வரமபுமீறி நடந்து கொண்டதற்குப் பதிலடியாக முஸ்லிம்களும் விருமபத்தகாத வரம்பு மீறிய செயல்களில் இறங்கி விடக் கூடாது என்று அவர்களுக்கு வலியுறுத்துவதும் அவசியமாயிற்று. ஏனெனில் ஹஜ்ஜுக்குச் செல்லவேண்டிய பாதைகள் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் அமைந்திருந்தன. இறைவனை நிராகரிக்கும் பற்பல கோத்திரத்தார் அந்த பாதைகளைக் கடந்துதான் ஹஜ்ஜுக்குப் போக வேண்டியிருந்தது. எனவே, எவ்வாறு முஸ்லிம்கள் இறையில்லத்தைத் தரிசிப்பதை விட்டுத் தடக்கப்பட்டார்ளோ, அவ்வாறே முஸ்லிம்களுடைய பகுதிகளைக் கடந்து செல்கின்ற அந்த இறைநிராகரிப்பாளர்களளையும் தடுத்து நிறுத்திட முஸ்லிம்களுக்கு வாய்ப்பு இருந்தது.

இறக்கியருளப்பட்ட சூழ்நிலை: 'ஆலு இம்ரான்', 'அன்னிஸா' ஆகிய இரு அத்தியாயங்கள் இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்து இந்த அத்தியாயம் இறங்கும் காலம் நெருங்க நெருங்க சூழ்நிலைகளில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆரம்பத்தில் உஹதுப் போரில் முஸ்லிம்கள் அடைந்த துன்பங்களும், மதீனாவின் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுகம் முஸ்லிம்களுக்கு ஆபத்தானவையாய் ஆக்கிவிட்டிருந்தன. ஆனால் இப்போதோ நிலைமை முற்றிலும் தலைகீழாய் மாறி இருந்தது. அரபுலக்கத்தில் வீழ்த்த முடியாத ஒரு சக்தியாக இஸ்லாம் விளங்கத் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய அரசு ஒருபுறம் நஜ்து பிதேசம் வரையிலும் இன்னொரு புறம்  அன்றைய ஷாம் (ஸிரியா) எல்லைகள் வரையிலும், மற்றொருபுறம் மக்காவின் அண்மைப் பகுதிகள் வரையிலும் பரவிவிட்டது. அப்போது இஸ்லாம் உள்ளங்களிலும், அறிவிலும் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் கொள்கை, கோட்பாடாக இருக்கவில்லை. மாறாக, தன் எல்லைகளுக்குள் வசிப்போர் அனைவரின் வாழ்வின் மீதும் செயலுருவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அரசாகவும் திழ்ந்தது.

இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய நெறிகளின்படியும் இஸ்லாமிய கண்ணோட்டத்திற்கேற்பவும், முஸ்லிம்களுக்கென்று தனியொரு பண்பாடு உருவாகிவிட்டிருந்தது. அந்தப் பண்பாடு வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் மற்ற பண்பாடுகளிலிருந்து வேறுபட்டுத் தனிச் சிறப்பும் பெருமையும் கொண்டு திகழ்ந்தது.

ஒழுக்கம், சமூகவியல், நாகரிகம் ஒவ்வொன்றிலும் இப்போது முஸ்லிமகள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டுத் தங்களுக்கென்று தனித் தன்மைகளைப் பெற்றுத் திகழ்நதனர். இஸ்லாமிய வாழ்க்கை இவ்விதம் முழுமையாக உருப்பெற்று விட்ட பின்னர் - தமக்கெனத் தனிச் சிறப்புடைய நாகரிகத்தைப் பெற்றுவிட்ட இந்த முஸ்லிமகள் - மீண்டும் எப்போதேனும் தம் பழைய வாழக்ககை;குத் திருமபுவர் என்ற நமபிக்கையை முஸ்லிம்கல்லாதார் முற்றிலும் இழந்துவிட்டனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்பு வரை முஸ்லிம்களின் முன்னேற்றப் பாதையில் பெரியதொரு முட்டுகட்டையாய் இருந்தது என்னவெனில், அவர்கள் குறைஷ் நிராகரிப்பாளர்களுடன் ஒரு தொடர் போராட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்தனர். அதனால் தம் அழைப்புப் பணியை விரிவுபடுத்திட அவர்களுக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தது. வெளித்தோற்றத்தில் தேல்வியாகவும், உண்மையில் வெற்றி வாய்ப்பாகவும் திகழ்ந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை இந்த முட்டுக்கட்டையை அகற்றிவிட்டது. இதனால் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய அரசாங்க எல்லைகளுக்குள் அமைதி கிட்டியது மட்டுமின்றி, மதீனாவின் சுற்றுப்புறப் பகுதிகளுக்கெல்லாம் இஸ்லாத்தின் அழைப்பை ஏந்திப் பரவலாகச் செய்வதற்கு அவர்ளுக்குப் போதிய வாய்ப்பும் நேரமும் கிடைத்துவிட்டது. இந்த அத்தியாயம் இறங்கிய பொழுது இருந்த நிலைமைகள்தாம் இவை.

பொருளடக்கம்: இந்த அத்தியாயம் முப்பெரும் கருத்துக்கூறுகளைக் கொண்டுள்ளது.

1. முஸ்லிம்களின் சமய நாகரிக அரசியல் வாழ்வு பற்றி இன்னும் பல சட்டங்கள் ஏவுரைகள் வழங்குவது இந்தக் கருத்துத்தொடரில் ஹஜ்ஜுப் பயணத்தின் ஒழுங்குமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டன. இறைச்சின்னங்களைக் கண்ணியப்படுத்தும்படியும் கஅபாவை தரிசிக்க வருவோர்க்குத் தொல்லை கொடுக்காதிருக்கும்படியும் கட்டளையிடப்பட்டது. உண்ணும், பருகும் பொருள்களில் ஹராம் (தடுக்கப்பட்டவை) ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) ஆகியவைக் குறித்துத் தீர்க்கமான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. மேலும் அறியாமைக் காலத்தில், தாமாகவே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டோருடன் அமர்ந்து உண்ணவும், பருகவும் அவர்களின் பெண்களை மணம்புரிந்து கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. ஒளு, முழுக்கு, தயம்மும் ஆகியவற்றின் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன. கலகம் புரிதல், குழப்பம் விளைத்தல் களவு ஆகியவற்றுக்கான தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்டன. மதுவும், சூதாட்டமும் திட்டவட்டமாக ஹராமாக்க (தடை செய்ய)ப் பட்டன. சத்தியத்தை முறித்து விட்டால் அதற்கான குற்றப்பரிகாரம் - கஃப்ஃபாரா நிர்ணயிக்கப்பட்டது. மேலும், (டயற ழக நஎனைநnஉந) சாட்சியம் தொடர்பான சட்டதிட்டங்களில் இன்னும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

2.முஸ்லிம்களுக்கு அறிவுரை:
இப்போது முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் குழுவினராய்த் திகழ்வதால் அவர்களை நோக்கி நீங்கள் நீதியில் நிலைத்திருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும்  வலியுறுத்தப்பட்;டது. உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களுடைய போக்கிலிருந்து விலகியிருந்து நீங்கள் உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும் , அல்லாஹ்வுக்கு வழிபட்டு, அடிபணிந்து நடப்பதாகவும், அவனது கட்டளைகளைப் பின்பற்றி வாழ்வதாகவும் நீங்கள் அளித்துள்ள வாக்குறுதியின் மீது உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது. மேலும், யூதர்கள், எந்த கதிக்கு உள்ளானார்களோ அந்த கதிக்கு நீங்களும் உள்ளாகாதீர்கள என்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.

3. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அறிவுரை: யூதர்களின் வலிமை இப்போது தகர்ந்துபோய் இருந்தது. மேலும், அரபுலகத்தின வட பகுதியில் ஏறக்குறைய யூதர்களடைய வல்லா ஊர்களும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் வந்துவிட்டிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு முறை யூதர்களுடைய தவறான போக்கு பற்றி எச்சரிக்கப்படுள்ளது. மேலும் நேரிய வழிக்கு வந்துவிடுமபடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹுதைபிய்யா உடன்படிக்கiயினால் அரவு நாடு அனைத்திலும் இஸ்லாமிய அழப்பைப் பரப்புவதற்கான வாய்ப்புக் கிட்டியிருந்த காரணத்தால், கிறிஸ்துவர்களை நோக்கியும் விரிவான முறையில் அவர்களுடைய கொள்கைகளின் தவறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், நம்பிக்கை கொள்ளுமபடியும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment