4 அன்னிஸா

Monday, September 5, 2011

அருளப்பெற்ற காலமும் கருத்துக் கூறுகளும்:

இந்த அத்தியாயம் பல உரைத்தொடர்களைத் தாங்கியுள்ளது. அவ்வுரைத் தொடர்கள் பெரும்பாலும் ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி, அல்லது ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பல்வேறு கால கட்டங்களில் இறங்கியிருக்கக் கூடும். எனினும் எங்கிருந்து எங்குவரையுள்ள வசனங்கள் ஒரே உரைத்தொடராக இறங்கின, அவை இறங்கிய சரியான காலம் எது என்று துல்லியமாக நிர்ணயிப்பது கடினமாகும். ஆயினும் அந்த உரைத்தொடர்களில் சில சட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டும் வசனங்கள் உள்ளன. ஹதீஸ் அறிவிப்புகள் அவற்றின் காலத்தை உணர்த்துகின்றன. அவற்றின் துணை கொண்டு அந்த உரைத்தொடர்கள் அருளப்பட்ட காலத்தை நாம் மேலோட்டமாக வரையறுக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, சொத்துப் பங்கீட்டு முறை மற்றும் அநாதைகளின் உரிமைகள் தொடர்பான அறிவுரைகள், உஹதுப் போரில் முஸ்லிம்களில் எழுபது பேர் ஷஹீதாகிவிட்ட பின்னர் இறங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம். இதனை அடிப்படையாக வைத்து, தொடக்கத்திலுள்ள 1 முதல் 28 வரையுள்ள வசனங்கள் இதே காலகட்டத்தில்தான் இறங்கியிருக்க வேண்டும் என்று நாம் கணிக்க முடிகிறது.

ஸலாத்துல் கவ்ஃப் (போர் போன்ற அச்சமிக்கச் சூழ்நிலையில் நிறைவேற்றப்படும் தொழுகை) பற்றிய தகவல் 'தாத்துர் ரிகாஃ' போர் குறித்த ஹதீஸ் அறிவிப்புகளிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. இப்போர் ஹிஜ்ரி 4-ஆண்டு நடைபெற்றது. எனவே, இந்தத் தொழுகை முறையை விளக்குகின்ற 101 முதல் 104 வரையுள்ள வசனங்கள் இடம் பெற்றுள்ள உரைத்தொடர், இப்போரை ஒட்டிய காலகட்டத்தில்தான் இறங்கியிருக்க வேண்டும் என்று நாம் கணிக்கலாம். மதீனா நகரிலிருந்து பனூநுளைர் எனும் யூதக் குலத்தாரை வெளியேற்றிய நிகழ்ச்சி ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாத்தில் நடந்தது. எனவே யூதர்களுக்கு, 'உங்கள் முகங்களை நாம் உருக்குலைத்து, பின்பக்கமாகத் திருப்பி விடுவதற்கு முன் இறைநம்பிக்கை கொண்டு விடுங்கள்!' எனும் இறுதி எச்சரிக்கை வசனம் 47-இல் காணப்படுகிறது. எனவே, இவ்வசனம் இடம்பெற்றுள்ள உரைத்தொடர் இக்கூட்டத்தாரை வெளியேற்றுவதற்குச் சற்று முந்திய காலத்தில்தான் இறங்கியிருக்கும் என்று பெரும்பாலும் கணிக்கப்படுகிறது.

மேலும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்வதற்கான அனுமதி ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டில் நடைபெற்ற பனூமுஸ்தலிக் போரின் போது வழங்கப்பட்டது. எனவே 'தயம்மும்' பற்றிக் குறிப்பிடுகின்ற வசனம் 43 முதல் 50 வரையுள்ள உரைத்தொடர் இந்தப் போரையொட்டிய காலகட்டத்திலேயே இறங்கியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அருளப்பெற்ற சூழ்நிலையும், பொருளடக்கமும்:

இவ்விதம், இந்த அத்தியாயம் அருளப்பெற்ற காலகட்டம் பற்றி ஒட்டு மொத்தமாகத் தெரிந்து கொண்டதற்குப் பின்னால் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றையும் ஒருமுறை நோட்டமிட்டுக் கொள்வது இன்றியமையாதது. ஏனெனில் அத்தியாயத்தின கருத்துக்களைப் புரிந்து கொள்ள இது நமக்குத் துணை செய்யும்.

அந்த நேரத்தில், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன்பு இருந்த பணியினை முப்பெரும் பகுதிகளாய்ப் பிரிக்கலாம்.

(1)ஹிஜ்ரத்திற்குப் பிறகு உடனடியாக மதீனாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் வேர்விடத் தொடங்கியருந்த கட்டுப்கோப்பான புதிய இஸ்லாமியச் சமுதாயத்தை பேணிப் பாதுகாத்து வளரச் செய்தல்.

(2)இறைவனுக்கு இணை கற்பிக்கும் அரபிகள் மற்றும் யூத நயவஞ்சகர்கள் ஆகிய சீர்திருத்தத்திற்கு எதிரான சக்திகளுடன் போராடி அவற்றை முறியடித்தல்.

(3) இத்தகைய எதிர்ப்புச் சக்திகளைப் பொருட்படுத்தாமல் இஸ்லாத்தின் அழைப்பை மேலும் பரவலாக்குதல்.

இந்தச் சூழு;நிலையில் அல்லாஹ் இறக்கியருளிய அத்தனை உரைத்தொடர்களும் இம்முப்பெரும் பிரவுகளுடன் தொடர்புடையவையே!

இஸ்லாமியச் சமுதாயத்தை ஒழுங்குற அமைப்பதற்காக, அத்தியாயம் 2 'அல்பகறா' வில் வழங்கப்பட்ட அறிவுரைகளை விட இன்னும் அதிகமான அறிவுரைகள் இப்போது அந்தச் சமுதாயத்திற்குத் தேவைப்பட்டன. இதனால்தான் அன்னிஸா அத்தியாயத்தின் இந்த உரைத்தெடர்களில் முஸ்லிம்கள் தம் கூட்டு வாழ்வை எவ்வாறு இஸ்லாத்தின் வழிமுறைப்படி சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரிவாகக் கூறப்பட்டது. வேதம் அருளப்பட்டோரின் ஒழுக்கம் மற்றும் அவர்களுடைய மார்க்க நடைமுறைகளை விமர்சித்து தங்களுக்கு முன்சென்ற இற்தச் சமுதாயத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதிருக்கும்படி முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நயவஞசகர்களின் போக்கை விமர்சித்து உண்மையான இறைநம்பிக்கையின் தேட்டங்கள் எவையென தெளிவாக்கப்பட்டன.

சீர்திருத்தத்தை எதிர்க்கும் சக்திகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம் உஹதுப் போருக்குப் பின்னர் மிகவும் சிக்கலான கட்டத்தை எட்டிவிட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் அல்லாஹ் ஒருபுறம் உணர்ச்சியூட்டும் உரைகளின் வாயிலாக பகைவர்களை எதிர்த்துப போரிட முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினான். மறுபுறம் போர்க்காலங்களில் பணியாற்றிட  வேண்டிய பல்வேறு முக்கியமான ஏவுரைகளை அளித்தான்.

முஸ்லிம்கள் அடிக்கடி பெரிய, சிறிய போர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலும், தண்ணீர் கிடைக்காத பாதைகளின் வழியாய் பயணம் செய்ய வேண்டியிருந்தது. எனவே தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், குளிப்பதற்கும் உளூ செய்வதற்கும் பதிலாக தயம்மும் செய்து கொள்ள அனுமதி அளிக்கபபட்டது. மேலும், இத்தகைய பயண வேலைகளில் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. அபாயம் நிறைந்த இடங்களில் 'ஸலாத்துல் கவ்ஃப்' எனும் தொழுகையை நிறைவேற்றும் வழிமுறையும் எடுத்துரைக்கப்பட்டது. அரபுலகின் பல்வேறு பகுதிகளில் இறைநம்பிக்கையற்ற கூட்த்தார்களுக்கிடையே விரவி வாழ்ந்த முஸ்லிம்களுக்கு விரிவான ஏவுரைகள் இந்த உரைத்தொடர்களில் வழங்க்கப்பட்டன. யூதர்களின் வஞ்சகம் முற்றும் மன முரண்டான போக்கு பற்றியும் அவர்களின் ஒப்பந்த மீறல்கள் பற்றியும் வன்மையாகக் கடிந்துரைக்கப்பட்டது. மேலும் தெளிவான வார்த்தைகளால் இத்தகையவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுவிக்கப்பட்து.

நயவஞ்சகர்களின் பல்வேறு வகுப்பினர் பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் தனித்தனி வுகுப்பினராய் பிரித்து ஒவ்வோர் வகுப்பினர் குறித்தும் இவர்களிடம் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

நடுநிலை என்று முஸ்லிமகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த குலத்தார்களோடு முஸ்லிமகள் மேற்கொள்ள வேண்டிய நடத்தை என்னவென்றும் தெளிவுபடுத்தப்பட்டது - இத்தகைய நிலiயில் அனைத்தையும்விட முக்கியமாகத் தேவைப்பட்டது எதுவெனில், முஸ்லிமகளின் நடத்தை மாசு மறுவற்றுத் திகழ வேண்டும என்பதே! ஏனெனில் அசத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் விரல் விட்டு எண்ணத்தக்க மிகச் சிறிய கூட்டம் வெற்றி காண முடியுமெனில் தன்னுடைய உயர் பண்புகளின் வலிமையினால்தான் வெற்றி பெற முடியும். இதனால்தான் முஸ்லிம்களுக்கு உயர்ந்த பண்பாடுகள் பற்றிய அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்ட ஒவ்வொரு குறைபாடும் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

இஸ்லாத்தின் சீர்திருத்த அழைப்பைத் தெளிவுபடுத்துவதுடன் யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இறைவனுக்கு இணைவைப்போர் ஆகிய மூன்று குழுவினரின் தவறான மதக்கருத்தோட்டங்கள், தவறான பண்பாடுகள், செயல்களைப் பற்றியும் இந்த அத்தியாயத்தில் விமர்சனம் செய்து அவர்களுக்கு சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பும் விடுவிக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment