7 அல் அஃராஃப்

Monday, September 5, 2011


பெயர்: இற்த அத்தியாயத்திற்கு அல் அஃராஃப் எனப் பெயரிட்டதற்குக் காரணம் இதனுடைய 46 வது வசனத்தில் 'அஸ்ஹாபுல் அஃராஃப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இறக்கி அருளப்பட்ட காலம்:-
இந்த அத்தியாயத்தின் கருத்துகளைச் சிந்தித்துப் பார்த்தால 6 ஆம் அத்தியாயமான 'அல் அன்ஆம்' அத்தியாயத்திற்கு எழுதிய முன்னுரையை ஒரு பார்வை பார்த்தாலே போதும்.

பொருளடக்கம்:
இந்த அத்தியாயத்தின் மையக் கருத்து, தூதுவத்துவம் பற்றி அழைப்பு விடுப்பதாகும். இறைவனால் அனுப்பப்பட்டிருக்கும் இறைத்தூதரைப் பின்பற்றுவதற்கு மக்களைத் தயார் படுத்துவதே இந்த உரைத்தொடரின் நோக்கமாகும். ஆயினும் அச்சுறுத்தி எச்சரிக்கும் பாணி மிக எடுப்பாக இந்த அத்தியாயத்தில் காணப்படுகிறது. ஏனெனில் இந்த அத்தியாயம் யாரை நோக்கி உரையாடப்படுகிறதோ அந்த மக்கா வாசிகளுக்கு இந்த அழைப்பை மீண்டும் மீண்டும் புரியவைப்பதிலேயே நீண்ட காலம் உருண்டோடி விட்டது. இனி இவர்களை அழைப்பதை விட்டுவிட்டு மற்ற மக்களை அழைக்கும்படி இறைத்தூதருக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுமோ என்கிற அளவுக்கு இந்த மக்களின் செவியேற்காத் தன்மையும், நெறி தவறிய போக்கும், பிடிவாதமும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன. இதனால் தான் விளக்கிக் கூறும் பாணியில் தூதுவத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அத்துடன் நீங்கள் உங்கள் தூதருக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் இதே போக்கினை உங்களுக்கு முன்பிருந்த சமூகங்களும் தத்தம் இறைத்தூதர்களுடன் மேற்கொண்டதால் மிகத் தீய கதிக்கு ஆளானார்கள் என்றும் எடுத்துக்காட்டப்படுகிறது. இவ்வாறாக, அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டு வந்த ஆதாரங்கள் முழுமை அடைய இருக்கும காரணத்தால் இந்த உரையின் இறுதிப் பகுதியில் சத்திய அழைப்பு, மக்கா வாசிகளை விட்டுவிட்டு வேதம் அருளப்பட்வர்களின் பக்கம் திருப்பப்பட்டது. மேலும், இப்போது ஹிஜ்ரத் மேற்கொள்ள (நாட்டை துறந்து செல்ல) அவர்கள் தமக்கு அருகிலுள்ளவர்களுக்கு மட்டும் சத்திய அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த கால கட்டம் முடியயப் போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாக இந்த அத்தியாயத்தின் ஓர் இடத்தில் உலக மக்கள் அனைவரையும் நோக்கி பொதுவாக உரையாடப்படுகிறது.

இந்த உரைத்தொடரின் போக்கு இடையில் யூதர்களை நோக்கித் திரும்புவதால் தூதுத்துவம் பற்றிய இந்த அழைப்பின் மற்றோர் அம்சமும் தெளிவாக்கப்பட்டுள்ளது:- அதாவது, இறை;தூதரின் மீது நம்பிக்கை கொண்ட பின்னர் அவர்களிடம் நயவஞ்சகத்தனமான போக்கினை மேற்கொள்ளல், மேலும், செவியேற்று வழிப்படுவதாகப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின் அதனை முறித்து விடுதல், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பகுத்தறியத் தெரிந்து கொண்ட பின்னர் அசத்திய வாதத்தில் மூழ்கிக் கிடத்தல் போன்ற செயல்களின் இறுதி கதி என்னவாகும் எனத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த அத்தியாயத்தின் இறுதியில் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அழைப்புப் பணியின் நுட்பம் பற்றிச் சில முக்கிய அறிவுரைகள் அருளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்ப்பாளர்களின் ஆத்திர மூட்டும் போக்குகள் மற்றும் கொடுஞ் செயல்களுக்கு எதிராக பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும். உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகி அசல் குறிக்கோளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கiயிலும் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment